விடியலுக்கு முன்பே மதுபாட்டிலை கையில் சேர்க்கும் திமுக… ‘ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து சூப்பர்’… போஸ்டரால் பரபரப்பு!

Author: Babu Lakshmanan
10 March 2023, 11:52 am

திண்டுக்கல் : வத்தலக்குண்டு மற்றும் நிலக்கோட்டை அரசு அலுவலங்கள் அருகே சூரியன் விடிவதற்கு முன்பே மது பிரியர்களுக்கு விடிவு காலத்தை தந்த திராவிட முன்னேற்றக் கழகமே என்ற வாசகங்களுடன் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வத்தலக்குண்டு, நிலக்கோட்டை பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட அரசு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகள் அனைத்திலும் விடியா அரசின் அனுமதியின்றி 24 மணி நேரமும் பார்கள் செயல்பட்டு வருகிறது.

இதனை கண்டித்து பூசாரிபட்டி அம்சா நகர் சேல்ஸ்மேன் என்ற பெயரில், திமுக ஆட்சி பதவியேற்று முதல் கையெழுத்து சிறப்பு என்ற தலைப்பில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊர்களிலும் தங்கள் கட்சியைச் சார்ந்தவர்கள் மூலம் சூரியன் விடிவதற்கு முன்பே மது பிரியர்களுக்கு விடிவு காலத்தை தந்த திராவிட முன்னேற்றக் கழகமே … குடியை குடித்து எங்கள் குடும்பங்கள் அழிந்தாலும் உங்கள் திராவிடக் குடும்பம் அழியக்கூடாது என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

வத்தலக்குண்டு மற்றும் நிலக்கோட்டை தாலுகா அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், யூனியன் அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் மற்றும் அரசு மகளிர் கலைக் கல்லூரி ஆகிய அரசு அலுவலகங்கள் அருகே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் இந்த பகுதி முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது.

சுவரொட்டி ஒட்டிய நபர் உண்மையிலேயே டாஸ்மாக் கடையில் சேல்ஸ்மேன் யாக பணிபுரிகிறாரா என்று குடிமக்கள் சந்தேகத்துடன் உள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 439

    0

    0