வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா? நாளை கடைசி நாள்.. சத்யபிரதா சாகு அறிவிப்பு!
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.இதற்கிடையே, தமிழ்நாட்டில் முதற்கட்டமாக ஒரே கட்டத்தில் ஏப்ரல் மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலும் அன்றே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தமிழகத்தில் விளவங்கோடு தொகுதிக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடைபெறுகிறது.பொன்முடி, சட்டமன்ற உறுப்பினராக தொடர்வதால், திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் கிடையாது.
வாக்களர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்புள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளையே (மார்ச் 17) கடைசி நாள்; 18 வயது நிறைவடைந்தவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் தற்போது கூட விண்ணப்பிக்கலாம். வயதானவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம். 12டி விண்ணப்பத்தை பயன்படுத்த வேண்டும். இப்தார் நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் பங்கேற்கலாம். ஆனால், வாக்கு சேகரிக்க கூடாது. தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. அதனால், ரூ.50 ஆயிரம் பணம் மட்டுமே கையில் எடுத்துச் செல்லலாம்.அரசாணை எதுவும் இனிமேல் வெளியிட கூடாது. பொன்முடி பதவி ஏற்பு தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜி உடனே அமைச்சராக பதவியேற்றார். மின்துறை மற்றும் மதுவிலக்கு…
படுதோல்வி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “விடாமுயற்சி” திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் படுதோல்வியடைந்தது.…
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படம் லியோ. திரிஷா, மிஷ்கின் சஞ்சய் தத், அர்ஜூன் உட்பட பலர்…
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஆந்திர மாநில சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தேவஸ்தானம்…
ராஜ்கிரண் அழைத்து வந்த வடிவேலு தனது ரசிகர் ஒருவரின் திருமணத்திற்காக மதுரைக்குச் சென்றிருந்தபோதுதான் வடிவேலுவை முதன்முதலில் சந்தித்தார் ராஜ்கிரண். மீண்டும்…
நயன்தாராவால் வந்த வினை விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமண நிகழ்வை படம்பிடிக்கும் உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் ரூ.25 கோடி கொடுத்து விலைக்கு…
This website uses cookies.