எய்ம்ஸ் மருத்துவமனை வர வேண்டுமா? அதிமுக வேட்பாளருக்கு வாக்களியுங்கள் : நடிகர் பவர் ஸ்டார் பிரச்சாரம்!

Author: Udayachandran RadhaKrishnan
7 April 2024, 5:36 pm

எய்ம்ஸ் மருத்துவமனை வர வேண்டுமா? அதிமுக வேட்பாளருக்கு வாக்களியுங்கள் : நடிகர் பவர் ஸ்டார் பிரச்சாரம்!

மதுரை மக்களவை த் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணன் ஆதரித்து திரைப்பட நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மதுரை எம் ஜி ஆர் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஆட்டோ நிலைய மற்றும் பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

தொடர்ந்து அவரிடம் பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது காவல்துறையினருக்கு தகவல் பரவ சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காவல்துறையிடம் முறையாக அனுமதி வாங்கி நீங்கள் பிரச்சாரம் செய்யவில்லை என்றும்இனிமேல் நீங்கள் அனுமதி வாங்கி தான் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறி திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது;
மதுரை என்னுடைய சொந்த ஊர் என்பதாலும், எனது உடன்பிறவா சகோதரான அதிமுக வேட்பாளர் ஆன சரவணனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள வந்துள்ளேன்.

இம் முறை உறுதியாக மருத்துவர் சரவணன் வெற்றி பெறுவார், படித்தவர், மருத்துவர், சொந்த ஊர் காரர் என்பதால் நிச்சயமாக வெற்றி பெறுவார். தொடர்ந்து ஏழை மக்களுக்கு நல்லது பண்ணுவார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ