உல்லாசம் அனுபவிக்கணுமா? இளம் பெண்களை வைத்து பணம் பறிக்கும் கும்பல் : பீதியில் பழனி..!!

Author: Udayachandran RadhaKrishnan
13 May 2024, 8:49 am

உல்லாசம் அனுபவிக்கணுமா? இளம் பெண்களை வைத்து பணம் பறிக்கும் கும்பல் : பீதியில் பழனி..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெட்டியார் சத்திரத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அதில் இரண்டு பெண்கள் தன்னை உல்லாசத்திற்கு அழைத்து அப்போது அங்கு வந்தபோது தன்னை பெண்களுடன் இருக்கும் போது மறைந்திருந்த ஆண் நண்பர்கள் புகைப்படம் வீடியோ எடுத்ததாகவும் பின்னர் தன்னிடம் இருந்த செல்போன் பணம் உள்ளிட்டவையை கத்தியை காட்டி மிரட்டி பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டதாகவும் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில் டிஎஸ்பி தனஜெயம் ஆய்வாளர் மணிமாறன் உத்தரவின் பேரில் தீவிர போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்ததில் இன்று காலை சண்முக நதி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமாக இரண்டு கார்களில் வந்த ஐந்து பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் திண்டுக்கல்லை சேர்ந்த குணசேகரன் வயது 40, நத்தத்தைச் சேர்ந்த பாலமுருகன் 37,திண்டுக்கல்லை சேர்ந்த லோகநாதன் , சின்னாளபட்டியை சேர்ந்த பவித்ரா 24 , சீலப்பாடியை சேர்ந்த காமாட்சி வயது 25 ,பிடித்து விசாரித்ததில் கடந்த சில நாட்கள் முன்பு தனியார் விடுதியில் ரமேஷ் என்பவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் படிக்க: ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை? ஆந்திர சட்டசபை தேர்தல்..காலை முதலே குவிந்த வாக்காளர்கள்!

இதையடுத்து அவர்களிடம் இருந்து எக்ஸ்.யூ.வி கார் கொடைக்கானலில் இருந்து நிசான் காரை திருடி வந்ததும் தெரியவந்தது . மேலும் அரிவாள், மூன்று செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு ஐந்து பேரையும் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதேபோல் கொடைக்கானலிலும் சம்பவம் நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பழனியில் ஆண்களை உல்லாசத்திற்கு அழைத்து ,அதை மறைந்திருந்து வீடியோ பதிவு செய்து கொண்டு கத்தியை காட்டி ஆண் நண்பர்கள் மூலம் பணம், செல்போன் உள்ளிட்டவைகளை பறித்துக் கொண்டும் இதை வெளியே சொன்னால் ஆபாச வீடியோக்களை வெளி விடுவோம் என மிரட்டி வரும் கும்பல் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!