திருவண்ணாமலை : வந்தவாசி நகர மன்ற தேர்தலில் 22வது வார்டை காங்கிரசுக்கு ஒதுக்கியதால் ஏமாற்றமடைந்த திமுக வேட்பாளர் மனைவி வாகனம் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகர மன்ற தேர்தலில் 22வது வார்டில் திமுக வேட்பாளர் மகேந்திரன் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் வேட்பு மனு பரிசீலனை முடிந்த நிலையில் திடீரென 22வது வார்டை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் மகேந்திரனை வாபஸ் பெறும்படி திமுக வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதை ஏற்க மறுத்து மகேந்திரன் அவரது மனைவி பாக்கியலட்சுமி மற்றும் ஆதரவாளர்களுடன் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வந்து எம்எல்ஏ அம்பேத்குமாரிடம் முறையிட்டுள்ளனர்.
பின்னர் அவருடன் நடத்த பேச்சுவார்த்தை உடன்பாடு எப்படாததால் கட்சி கூறியபடி வாபஸ் பெறுங்கள் என எம்எல்ஏ கூறியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அங்கிருந்து வெளியேறிய வேட்பாளர் மகேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்தவாசி – ஆரணி சாலையில் சாலை மறியல் செய்தனர்.
அப்போது வேட்பாளர் மகேந்திரன் மனைவி பாக்கியலட்சுமி அவ்வழியாக வந்த வாகனத்தின் முன்னே படுத்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் எம்எல்ஏ அம்பேத்குமார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். 22வது வார்டு திமுகவிற்கு ஒதுக்கவில்லை என்றால் பல கட்ட போராட்டம் நடத்தப்படும் என திமுகவினர் எச்சரித்துள்ளர்.
இந்த நிலையில் இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளதால், அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம் என திமுக வேட்பாளர் சமாதானம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…
எங்களை விட்டுப் போகாதீர்கள் என எவ்வளவோ கேட்டோம், அவராகவே போனார் என ஓபிஎஸ்சை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.…
This website uses cookies.