பேட்டிக் கொடுக்க பயந்தாரா புஸ்ஸி ஆனந்த்.. தெறித்து ஓடிய தவெக தொண்டர்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
4 April 2025, 5:58 pm

வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் ஆட்சேபனை தெரிவித்து வருகிறது.

அந்த வகையில் தவெக தலைவர் விஜய்யும் தனது எதிர்ப்பு பதிவு செய்தார். உடனடியாக சட்டத்திருத்த மசேதாவை திரும்ப பெற வேண்டும் இல்லையென்றால் தமிழ்நாடு முழுவதும் தவெகவினர் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என கூறியிருந்தார்.

இதையும் படியுங்க: தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை… . மேலிடம் சொல்வதை செய்வேன் ; அண்ணாமலை அறிவிப்பு!

அதன்படி இன்று, தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றிக் கழக கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை பனையூரில் தவெக அலுவலகம் அந்துள்ள பகுதியில் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தவெகவினர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த், இஸ்லாமிய மக்களுக்கு எதிராக போடப்பட்டுள்ள வக்பு வாரிய திருத்த சட்ட மசேதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

இந்த சட்டத்தால் இஸ்லாமியர்கள் அச்சத்தில் உள்ளனர். தலைவர் விஜய் எப்போதும் இஸ்லாமிய மக்களுடன் இருப்பேன் என உறுதியாக கூறியுள்ளார். இந்த சட்டத்தால் இஸ்லாமிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறினார்.

அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி, எந்த இடத்தில் இந்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு என பாஜக கேட்கிறதே என கேட்டார்.

அதற்கு பதிலளித்த புஸ்ஸி ஆனந்த், அந்த சட்டம் குறித்து இஸ்லாமியர்களுக்கு நன்றாகே தெரியும், அதனால்தான் அவர்கள் எதிர்க்கிறார்கள் என கூறினார். ஆனால் அவரை விடாமல் மடக்கிய செய்தியாளர்கள், எந்த ஷரத்து வக்பு வாரிய மசோதாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருக்கிறது என கூறுங்கள் என கேட்க, பிரச்சனை இருப்பதால்தான் இஸ்லாமியர்கள் போராடுகிறார்கள், அவர்களுக்கு ஆதரவாக தவெக போராடுகிறது.

Was TVK General Secretary Bussy Anand afraid to give an interview

உங்கள சொத்தில் இன்னொருவர் உட்கார்ந்து கொண்டால் நீங்க ஏத்துக்கொள்வீர்களா? அது போலத்தான் வக்பு வாரிய சட்டம் உள்ளது என கூறி அங்கிருந்து புறப்பட்டார்.

புஸ்ஸி ஆனந்தின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இன்று பல பகுதிகளில் தவெகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் சென்னை அமைந்தகரையில் தவெகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற போது அங்கு வந்த போலீசார் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது நடவடிக்கை என எச்சரித்தனர்.

இதையடுத்து துண்டை காணோம், துணியை காணோம் என அங்கிருந்து தப்பியோடிய வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…
  • Leave a Reply