பெட்ரோலில் தண்ணீர் கலப்படம்… 39 லிட்டர் பெட்ரோல் அடித்த கார் ஓட்டுநருக்கு காத்திருந்த அதிர்ச்சி : கோவையில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
16 November 2022, 8:50 am

கோவை சித்தா புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் கால் டாக்ஸி வைத்துள்ளார். அந்த காரை ரமேஷ் என்பவர் ஓட்டுனராக பணி புரிந்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள கோகோ cbe city என்ற பெட்ரோல் பங்கில் 39.90 லிட்டர் பெட்ரோல் 4,119 ரூபாய்க்கு பெட்ரோல் அடித்து உள்ளார்.

அதன் பின்னர் ஆவாரம்பாளையம் பகுதியில் செல்லும் பொழுது இந்த கார் பாதி வழியில் நின்று உள்ளது. அங்கிருந்த கார் மெக்கானிக்கை அழைத்துக் கொண்டு கொண்டு காரை சோதித்த போது பெட்ரோல் டேங்க முழுவதும் தண்ணீர் இருந்து உள்ளது.

இதனை பார்த்த ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பெட்ரோல் பங்குக்கு விரைந்து சென்று பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீர் இருந்து உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

பெட்ரோல் பங்க் நிர்வாகிகள் அதற்கு சரியான பதிலை தரவில்லை பின்னர் ரமேஷ் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும் இது குறித்து பெட்ரோல் பங்க் மேலாளர் நந்தகோபால் இந்தியன் ஆயில் பொறியாளர்களிடம் பேசி உள்ளோம். அவர்கள் வந்து அடிக்க பட்ட பெட்ரோல் பம்ப் ஆய்வுக்கு உட்படுத்துவார்கள் என தெரிவித்துள்ளார். இதனால் அந்த பெட்ரோல் பங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • Vijay TV VJ Priyanka's 2nd marriage... Viral video!விஜய் டிவி VJ பிரியங்காவுக்கு சைலண்டாக நடந்த 2வது திருமணம்? வெளியான புகைப்படம்!