கோவை சிங்காநல்லூர் ஹவுசிங் யூனிட்டில் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்து விபத்து : இட்லி கடை நடத்தி வந்த மூதாட்டி படுகாயம்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 April 2022, 1:25 pm

கோவை : கோவை சிங்காநல்லூர் ஹவுசிங் யூனிட் பகுதியில் தண்ணீர் தொட்டியை பார்க்கச் சென்ற மூதாட்டி சுவர் இடிந்து விழுந்து படுகாயமடைந்தார்.

கோவை சிங்காநல்லூர் ஹவுசிங் யூனிட் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மிகவும் பாழடைந்து காணப்படும் இந்த ஹவுசிங் யூனிட் மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் இருப்பதன் காரணமாக அவ்வப்போது விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஹவுசிங் யூனிட்டை காலி செய்த நிலையில் ஒரு சில குடும்பங்கள் மட்டும் வசித்து வருகின்றன. அதில் சுப்புலட்சுமி (வயது 63) என்பவர் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்பகுதியில் குடியிருந்து கொண்டு இட்லி கடை நடத்தி வருகிறார்.

இதனிடையே நேற்று கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இந்நிலையில் இன்று அதிகாலை குடிநீர் தொட்டியில் தண்ணீர் அளவை பார்பதற்காக மூதாட்டி சுப்புலட்சுமி வீட்டின் மாடிக்கு சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் மேற்கூறை இடிந்து விழுந்ததில், மாடியிலிருந்து சுப்புலட்சுமி கீழே போடப்பட்டிருந்த சிமெண்ட் சீட்டு கொட்டகையின் மீது விழுந்து, சிமெண்ட் சீட்டு மேற்கூரை உடைந்து இட்லி கடைக்குள் விழுந்தார்.

சுவர் இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள், படுகாயங்களுடன் கிடந்த மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சிங்காநல்லூர் காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்.

இதேபோன்று சம்பவ இடத்திற்கு விரைந்த முன்னாள் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் சம்பவ இடத்தை ஆய்வு செய்ததுடன், விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி