நாங்கள் எப்போதும் பாஜக ஆதரவுதான்.. அதிமுக பற்றி கவலையில்லை : கூட்டணி கட்சி பரபரப்பு கருத்து!!

Author: Udayachandran RadhaKrishnan
8 October 2023, 2:01 pm

நாங்கள் எப்போதும் பாஜக ஆதரவுதான்.. அதிமுக பற்றி கவலையில்லை : கூட்டணி கட்சி பரபரப்பு கரத்து!!

வேலூர் மாவட்டம் வேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டோல்கேட் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் புதிய நீதிக்கட்சியின் சார்பில் மருத்துவ முகாமானது நடந்தது.

இதனை புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். இதில் எலும்பு சிறப்பு சிகிச்சை ,பல் மருத்துவம், கண்சிகிச்சை, கண்பரிசோதனை, நீரிழிவு நோய் பரிசோதனை ரத்த அழுத்த பரிசோதனை தோல் நோய் சிகிச்சை ,காது மூக்கு தொண்ட சிகிச்சை உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும் பொதுமக்களிடம் ஏ.சி.சண்முகம் நேரடியாக சென்று அளிக்கபடும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். இவ்விழாவில் புதிய நீதிக்கட்சி நிர்வாகிகள் ரவிக்குமார் ஏ.சி.எஸ் அருண்குமார் மற்றும் திரளானோர் பங்கேற்றனர்.

பின்னர் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே புதிய நீதிக்கட்சி நீடிக்கிறது பாஜகவில் நான் வேலூர் எம்பி தொகுதியில் போட்டியிட்டு அதிக வாக்குகளை பெற்றேன்.

இருந்தாலும் தோல்வியடைந்தேன் அதன் பின்னரும் பாஜக கூட்டணியில் தான் போட்டியிட்டேன் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினேன். இருந்தாலும் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்போம் இந்தியாவை வல்லரசாக்க வேண்டுமென்றால் மீண்டும் நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக வேண்டுமென்ற நோக்கில் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளோம் என கூறினார்

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…