Categories: தமிழகம்

420களை ஒழிக்க போகிறோம்.. தமிழகம் முழுவதும் பாஜகவுக்கு ஆதரவு அலை பெருகுது : பாஜக மாநில பொதுச்செயலாளர் பெருமிதம்!!

420களை ஒழிக்க போகிறோம்.. தமிழகம் முழுவதும் பாஜகவுக்கு ஆதரவு அலை பெருகுது : பாஜக மாநில பொதுச்செயலாளர் பெருமிதம்!!

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அலுவலகம் இன்று திண்டுக்கல்லில் திறக்கப்பட்டது பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் இராம. சீனிவாசன் ரிப்பன் வெட்டி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் இராம சீனிவாசன் பேசியதாவது,தமிழக முழுவதும் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதியிலும் நாடாளுமன்ற தேர்தல் அலுவலகம் திறந்து வருகிறோம். இதைத்தொடர்ந்து அனைத்து சட்டமன்றங்களிலும் அனைத்து தொகுதி வாரியாக தேர்வு தேர்தல் அலுவலகம் தொடங்க உள்ளோம்.

தமிழக அரசியலில் சூழல் தற்போது சூடாகிக் கொண்டே வருகிறது. நட்டா தமிழகம் வருகிறார் நிர்வாகிகள் சந்திப்பு நடக்கிறது. அதனைத் தொடர்ந்து அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் வரும் 25ஆம் தேதி பாரத பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்

பாரதிய ஜனதா கட்சியை பொறுத்த வரை கூட்டணி பேச்சு வார்த்தை என்பது நடந்து வருகிறது. யாருடன் கூட்டணி என்பதை தலைமை தான் முடிவு அறிவிக்கும். யார் எந்த கூட்டணி வேட்பாளர் எந்த தொகுதியில் நின்றாலும் 39 தொகுதிகளும் பிரதமர் மோடி நிற்பதாக நினைத்து பணியாற்றுகிறோம்

பத்திரிகை மற்றும் செய்தி ஊடகங்களில் வரக்கூடிய கருத்துகணிப்புகள் தவறானது பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை தமிழகத்தில் வளர்ந்து வருகிறோம்.

இந்த தேர்தலில் 20% ஓட்டு பாரதிய ஜனதாவிற்கு கிடைக்கும் அதை தேர்தலுக்குப் பிறகு கண்கூடாக பார்க்க முடியும் இந்த தேர்தல் முடிவுகள் வியப்பை அளிக்கும் வகையில் இருக்கப்போகிறது மிகப்பெரிய ஆதரவலை தமிழகத்தில் பாஜகவிற்கு வீசிவிடுகிறது

நத்தம் அருகே 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் மின் வசதி சாலை வசதி செல்போன் தொடர்பு கூட இல்லாத நிலையில் இந்த விடியல் அரசு இருக்கிறது. ஆனால் எந்த தொலைத் தொடர்பும் இல்லாத அந்த இடத்தில் உள்ள கிராம மக்கள் மோடியை நன்றாக தெரியும் என்கிறார்கள்.

நாம் தமிழர், உள்ளிட்ட கட்சிகளுக்கு செல்லக்கூடிய ஓட்டுக்கள் இந்த முறை பாஜக விற்கு கிடைக்கும். தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி மரியாதையாக பேசுவதாக தெரிவித்துள்ளார்.

அதற்குரிய மரியாதை அவருக்கு கிடைக்கும் பொது சிவில் சட்டம் நாட்டிற்கு கட்டாயம் தேவை உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் இது உள்ளது எந்த மதத்திற்கும் எந்த நாட்டிலும் தனி சட்டம் கிடையாது

காஷ்மீரில் 370 ஒழித்ததால் இந்த முறை 370 இடங்களில் வெற்றி பெறுவோம் அடுத்ததாக 420ஐ நாடு முழுவதும் ஒழிக்க போகிறோம் அதனால் அடுத்த முறை 420 இடங்களை பாஜக கைப்பற்றும்.

தமிழகத்தில் தொழில் முதலீடு 6 லட்சம் கோடி என்று கூறுகிறது திமுக அரசு ,ஆனால் தென் மாவட்டங்கள் எந்த பகுதிகளும் எந்த முதலீடும் செய்யப்படவில்லை. எந்த திட்டமும் எந்த ஒரு முயற்சியும் திருச்சிக்கு தென்பகுதியில் திமுக அரசு கொண்டுவரவில்லை இந்த வள்ளலில் நடக்கிறது திமுக அரசு.

தமிழகத்தில் காமராஜர் காலத்தில் இருமுனை போட்டி மட்டுமே இருந்து வந்தது, அதற்கு பிறகு இந்த முறை தேர்தலில் காமராஜர் காலத்திற்குப் பிறகு மும்மூனைப் போட்டி நடக்கிறது. அது அதிமுக திமுக பாரதிய ஜனதா கட்சி என்ற போட்டி பாரதிய ஜனதா கட்சி புலி பாய்ச்சலில் களப்பணி ஆற்றுகிறது என தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

45 minutes ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

1 hour ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

2 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

4 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

5 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

6 hours ago

This website uses cookies.