பிறப்பில் மட்டுமல்ல நாங்கள் இரட்டையர்கள் அல்ல : 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டை சகோதரர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 June 2022, 4:16 pm

திருப்பூர் : இரட்டைப் பிறவி இருவரும் பிளஸ் 2 தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் அக்நெல் தம்பதியினர் . இவர்களுக்கு ரோகித் ராஜா மற்றும் ரோஷன் ராஜா என இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் ( இரட்டைப் பிறவி ), இரு மகன்களும் திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடந்து முடிந்த பிளஸ் டூ பொதுத் தேர்வில் இவர்களின் இரட்டை மகன்களும் 417 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி அடைந்துள்ளனர். நாங்கள் பிறப்பில் மட்டும் இரட்டைப் பிறவி அல்ல மதிப்பெண்கள் எடுப்பதிலும் ஒரே மாதிரி மதிப்பெண்தான் எடுப்போம் என்று பிளஸ் டூ பொதுத் தேர்வில் இரட்டைப் பிறவியான இருவரும் சொல்லிவைத்தாற்போல், இருவரும் 417 மதிப்பெண் எடுத்த சம்பவம் பள்ளியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது .

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 1117

    0

    0