தமிழ்நாட்டின் தலையெழுத்தை எங்களால் மாற்ற முடியும்… ஒருமுறை வாய்ப்பு தாருங்கள் : பாமக விழாவில் அன்புமணி வேண்டுகோள்!

Author: Udayachandran RadhaKrishnan
16 July 2023, 3:11 pm

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) 35 வது தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கொடியை ஏற்றிவிட்டு அங்கு கலந்துகொண்ட அனைவர்க்கும் இனிப்பு வழங்கினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் ” இந்த விழாவில் கலந்து கொண்ட மக்கள், மாணவியர்கள், பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி.

108 ஆம்புலன்ஸ் திட்டம் என்று சொன்னால் பாட்டாளி மக்கள் கட்சி, குட்கா தடை சட்டம் என்று சொன்னால் பாட்டாளி மக்கள் கட்சி தான், காவேரி டெல்டாவை பாதுகாப்பு மண்டலமாக ஆக்கிய அந்த சட்டத்தை கொண்டு வந்தது என்று சொன்னாலே அது போராடி பெற்றது பாட்டாளி மக்கள் கட்சி தான்.

பாட்டாளி மக்கள் கட்சியால் இன்று தமிழ்நாடு இந்தியாவிலே 6 இட ஒதுக்கீடுகளை போராடி பெற்று இருக்கின்றோம். இது தமிழ்நாட்டில் மட்டும் இல்லை இந்தியாவில் எந்த கட்சியும் செய்யாத சாதனை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பல உதவிகளை செய்து வருகின்றோம். எங்களுக்கெல்லாம் உடனடியாக முதலமைச்சர் ஒரு நாற்காலியில் பதவி கொடுக்க வேண்டும் என்றெல்லாம் எங்களுக்கு ஆசை இல்லை.

ஆட்சியில் இருந்து கொண்டே சாதனைகளை செய்வது பெரிய காரியமாக நான் பார்க்கவில்லை. கையெழுத்து போடுகின்ற அந்த அதிகாரம் முதலமைச்சருக்கு இருக்கிறது . ஆனால், இதனை நான் ஒரு சாதனையாக பார்க்கவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே எதிர்க்கட்சியாக இருக்கின்ற நேரத்தில் இவ்வளவு சாதனைகளை செய்து இருப்பது தான் உண்மையான சாதனை.

ஆட்சியில் இருக்கின்ற அவர்களை அந்த கையெழுத்தை போட வைப்பது தான் முக்கியமான சாதனை. எனவே, தமிழ்நாட்டு மக்கள் எங்களுக்கு அங்கீகாரம் தரவேண்டும். நாங்களும் பல முறை, பல தருணங்களாக வாய்ப்பு கேட்டுக்கொண்டு இருக்கிறோம். ஆனால், எங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. 5 ஆண்டு காலம் ஆளுவதற்கு ஒரு முறை வாய்ப்பு தாருங்கள். அனைவரின் தலையெழுத்தையும் எங்களால் மாற்ற முடியும்” என ன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

  • Premgi Amaren marriage newsநடிகர் பிரேம்ஜிக்கு இப்படி ஒரு பிரச்சனையா..மனைவி சொன்ன அதிர்ச்சி தகவல்..!
  • Views: - 292

    0

    0