நாங்க நினைத்தால் தான் பந்த் நடத்த முடியும்… எங்கள தாண்டி நடத்த முடியாது என வணிகர்கள் பேரமைப்பு அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
27 December 2022, 3:11 pm

புதுச்சேரியில் நாளை நடத்தப்படும் பந்த்திற்கு வணிகர்கள் பேரமைப்பு ஆதரவு இல்லை என தமிழக வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் கோட்டக்குப்பம் போம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் முப்பெரும் விழா விழுப்புரம் மாவட்ட கோட்டக்குப்பத்தில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளருக்கு பேட்டி அளித்த அவர், வரும் பாராளுமன்றத் தேர்தலில் சாமானியர்களின் வாக்கு யாருக்கு வேண்டும் என்பதை அரசியல் கட்சிகள் உறுதி செய்ய வேண்டும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக இருப்பதை விட்டுவிட்டு சாமானிய வணிகர்களுக்கு ஆதரவாக சட்டத்தை ஏற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

14 பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். ஆனால் வரக்கூடிய துறை அதிகாரிகள் எது தடை செய்யப்பட்ட பொருள்..? எது தடை செய்யப்படாத பொருள்..? என தெரியாமல் அள்ளி செல்கிறார்கள்.

கொள்ளை அடிப்பதாக நினைக்கிறார்கள் முதல் கட்டமாக கார்ப்பரேட் கம்பெனிகள் பயன்படுத்தக்கூடிய ஒருமுறை பிளாஸ்டிக் அடியோடு அரசு ரத்து செய்ய வேண்டும் என விக்கிரமராஜா தெரிவித்தார்.

பந்த் நடந்தால் வர்த்தகம் பாதிக்கும்.. நாங்கள் நினைத்தால் தான் பந்த் நடத்த முடியும்..புதுச்சேரியில் நாளை நடத்தப்படும் பந்த்திற்கு வணிகர்கள் பேரமைப்பு ஆதரவு இல்லை…வழக்கம் போல் கடைகள் திறந்து இருக்கும் என்றும் அவர் கூறினார்..

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 428

    0

    0