2 புத்தகங்களை அண்ணாமலைக்கு அனுப்பியிருக்கோம்.. இனியாவது பொய் பேசாமல் இருந்தால் நல்லது : அமைச்சர் சேகர்பாபு!!!

Author: Udayachandran RadhaKrishnan
14 October 2023, 2:31 pm

2 புத்தகங்களை அண்ணாமலைக்கு அனுப்பியிருக்கோம்.. இனியாவது பொய் பேசாமல் இருந்தால் நல்லது : அமைச்சர் சேகர்பாபு!!!

சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மீட்கப்பட்ட கோயில் நிலங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தேவையில்லை. இந்த ஆட்சிக்கு பின் மீட்கப்பட்ட கோயில் நிலங்களின் முதல் பாக புத்தகம் வெளியிடப்பட்டது. அந்த புத்தகத்தில் மீட்கப்பட்ட நிலங்களின் விவரங்களை நாங்கள் தெரிவித்துள்ளோம்.

கடந்த 2 மாதங்களுக்கு முன் மீட்கப்பட்ட கோயில் நிலங்களின் இரண்டாம் பாக புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட புத்தகங்களின் மூன்றாம் பாகம் வெளியிட உள்ளோம். இதில் எந்தவிதமான ஒளிவு மறைவு இல்லை.

யார் கேட்டாலும், இந்த புத்தகத்தை அனுப்பி வைக்க இந்து சமய அறநிலையத்துறை தயாராக உள்ளது. ஆக்கிரமிப்பில் இருந்து இந்து சமய அறநிலையத்துறையால் மீட்கப்பட்ட கோயில் நிலங்கள் குறித்து அரசால் வெளியிடப்பட்ட 2 புத்தகங்களை அண்ணாமலைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

திமுக ஆட்சியின் மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்று எண்ணியதே ஆன்மிகத்தை வைத்து தான். திமுக ஆட்சிக்கு வந்தால் இந்து ஆலயங்கள் பராமரிக்கப்படாது, பாதுகாக்கப்படாது என்ற பொய் பிரச்சாரத்தை முன்வைத்து வந்தார்கள்.

இந்த பொய் பிரச்சாரத்தை பொய்யாக்கியது முதல்வர் மு.க.ஸ்டாலின். குற்றசாட்டுகளை வைக்க வைக்க எங்களது பனியின் வேகம் அதிகரிக்க தான் செய்யும், குறையாது என தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 369

    0

    0