நீட் விவகாரத்தில் நாங்க ஒரே நிலைப்பாடுதான்.. இப்ப அதிமுகவுக்கு தான் பயம் : அமைச்சர் ரகுபதி விமர்சனம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
17 August 2023, 9:22 pm

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நீட் விவகாரத்தில் திமுக ஒரே நிலைப்பாடு தான் எடுத்துள்ளது நீட்
வேண்டாம் என்பது இரட்டை நிலைப்பாடு நாங்கள் எடுக்கவில்லை

மதுரை மாநாட்டிற்கு கூட்டம் சேர்க்க முடியாது என்ற பயம் எடப்பாடிக்கு வந்துவிட்டது. அதனால் தான் அவர் திமுக மீது பழி போடுகிறார். அதிமுகவினர் பொதுமக்களை திருப்பரங்குன்றம் போகலாம் அழகர் மலைக்கு போகலாம் என்று ஊர் ஊராக சென்று அழைத்து வருகின்றனர்.

ஆனால் பொதுமக்கள் செல்ல தயாராக இல்லை அதனால் தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு பயம வந்துவிட்டது. நாங்கள் எங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி அன்றைய தினம் உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம்.

திமுகவினர் யாரும் அதிமுக மாநாட்டிற்கு செல்ல போவது கிடையாது பொதுமக்களும் போகப்போவது கிடையாது. கல்வியை பொதுப பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கண்டிப்பாக தமிழக அரசு மாற்றும் அதன் பிறகு நீட் விலக்கு பெறப்படும்.

காவேரி மேலாண்மை வாரியம் உத்தரவுபடி கர்நாடகா தண்ணீர் திறக்க வேண்டும் முதல் கட்டமாக 10 டிஎம்சி தண்ணீர் திறந்து விட்டுள்ளனர் நீதிமன்ற தீர்ப்புப்படி நமக்கு வரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தர வேண்டும் என்பதுதான் தமிழகத்தின் நிலைபாடு.

சேலம் மத்திய சிறையில் கள்ளச்சாராய ஊரல் கண்டுபிடித்துள்ளதாக தவறான தகவலை பரப்பி வருகின்றனர். அது போன்று எதுவும் நடக்கவில்லை.

சிறையில் பல்வேறு கட்டுப்பாடுகள் கண்காணிப்புகள் உள்ளதால் அதற்கு வாய்ப்பு கிடையாது பலர் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

  • Dhanush accused of troubling Keerthy Suresh கீர்த்தி சுரேஷ்க்கு தொல்லை : தனுஷை எச்சரித்த ரஜினி..வெளிவந்த ரகசியம்..!
  • Views: - 276

    0

    0