தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!
Author: Udayachandran RadhaKrishnan26 April 2025, 5:01 pm
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் இன்று திருப்பாலைவனம் சமுதாய கூடத்தில் மாவட்ட கழக செயலாளர் பலராமன் தலைமையில் நடைபெற்றது.
இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் செய்தி தொடர்பாளர் பொன்னையன் கலந்துகொண்டு வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர் அதிமுக செய்தி தொடர்பாளர் முன்னாள் அமைச்சர் பொன்னையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக வெற்றி கழகத்தில் கிளைக் கழக செயலாளர்கள் பூத் கமிட்டியில் அதிக அளவில் இளைஞர்களை நியமித்து உள்ளனர்.
அதனை மீறுகின்ற வகையில் அதிமுகவில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்றும் அதிமுகவில் நிறைய இளைஞர்கள் உள்ளனர். இளைஞர்களை முன்னிறுத்தி செயல்படுத்த வேண்டும்.
அந்தப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் அமித்ஷாவை பதவி விலக சொல்லும் திருமாவளவன் நிலையான கொள்கையோடு நிலையான செயல்பாட்டோடு இருக்கிறாரா? தகுதியான கேள்வியை அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறினார்.
ஊடகத்துறை 95% ஊடகத்துறை வியாபார ரீதியாக செயல்படுகிறார்கள். மக்களின் உண்மை நிலையை பிரதிபலிக்கவில்லை என அவர் தெரிவித்தார்