எங்க குறியே சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கணும் : 16 இடத்தில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என காவல் நிலையத்திற்கு வந்த கடிதத்தால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
29 September 2022, 11:34 am

பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என்று மேற்கு காவல் நிலையத்திற்கு மர்ம நபர்கள் கடிதம் அனுப்பியது போலீசா விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய ஆய்வாளருக்கு மர்ம நபர்கள்
கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் அல்லது கையெறி குண்டு வீசப்படும்.

காவல்துறை எங்களுக்கு எதிரி அல்ல சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என SDPI குமரன் நகர், PFI குமரன் நகர் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

காவல் நிலையத்திற்கு வந்த இந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கடிதத்தை அனுப்பிய மர்ம நபர்கள் யார் என குறித்தும் குறிப்பாக தற்போதுள்ள சூழ்நிலையை வேறு யாரும் தவறுதலாக பயன்படுத்தி திசை திருப்பும் நோக்கில் பண்ணுகின்றார்களா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 483

    0

    0