சங்கினு சொல்லி பாஜகவினரை இழிவுபடுத்தறாங்க.. நாங்க ரஜினி, கமல், விஜய்யிடம் ஆதரவு கேட்போம் : வானதி சீனிவாசன் தடாலடி!

Author: Udayachandran RadhaKrishnan
29 January 2024, 4:56 pm

சங்கினு சொல்லி பாஜகவினரை இழிவுபடுத்தறாங்க.. நாங்க ரஜினி, கமல், விஜய்யிடம் ஆதரவு கேட்போம் : வானதி சீனிவாசன் தடாலடி!

தென்சென்னை பாஜக அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்,

அப்போது அவர் கூறியதாவது, நாங்கள் பாஜவுக்காக நாடாளுமன்ற தேர்தலில் அனைவரிடமும் ஆதரவு கேட்போம். ஏன் தேவைப்பட்டால் ரஜினி, கமல், விஜய் என எல்லா நடிகர்களிடமும் நாங்கள் ஆதரவு கேட்போம். ஆதரவு கேட்பது எங்கள் கடமை.

அதேபோல் எங்களுக்கு ஆதரவு அளிப்பது அல்லது அளிக்காமல் இருப்பது அவர்களது தனிப்பட்ட விருப்பம் என தெரிவித்தார்.

மேலும், சங்கி எனும் சொல்லை இழிவுபடுத்தும் சொல்லாக சிலர் பயன்படுத்தி வருகின்றனர். சங்கி எனும் சொல்லை பாஜகவில் இருப்பவரை குறிவைத்து ட்ரோல் செய்ய பயன்படுத்துகின்றனர்.

நாட்டின் நலனை விரும்புபவர்களை சங்கி என்று கூறுகிறார்கள் எனவும், சங்கி கருத்து குறித்து வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டார்.

  • Sandakozhi movie facts சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!