எத்தனை தடை போட்டாலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்தி காட்டுவோம் : தமிழக அரசுக்கு பகிரங்க எச்சரிக்கை!

Author: Udayachandran RadhaKrishnan
19 August 2023, 5:23 pm

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் இந்து முன்னணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆறு ஒன்றியங்களைச் சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடத்துவது குறித்தும் ஆகஸ்ட் 27ஆம் தேதி தமிழக முழுவதும் 7000 இடங்களில் இந்து முன்னணி சார்பில் நடத்தப்படும் உழவார பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தின் முடிவில் செய்ததியா ளர்களை சந்தித்த இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் கூறுகையில் விநாயகர் சதுர்த்தி ஊர் வலம் ஆரம்பித்த காலத்தில் இருந்து அதற்கு தடை என்பதை விதித்து வருகிறார்கள்.

பனி மாதா ஊர்வலத்தையோ மொகரம் பண்டிகை அன்று நடக்கும் ஊர்வலத்தையோ அரசு தடை செய்வதில்லை. இருப்பினும் எவ்வித தடை வந்தாலும் அதை மீறி விநாயகர் சக்தி ஊர்வலம் நடத்துவோம். இதற்காக நாங்கள் சிறை செல்லவும் தயாராக இருக்கிறோம். கண்டிப்பாக அனைத்து இடங்களிலும் திட்டமிட்டபடி ஊர்வலம் நடத்தப்படும்.

சாதிய சண்டைகள் அரசியல் கட்சிகளால் ஏற்படுத்தப்படுகின்றன. நமது சின்ன வயதில் இருந்ததை விட இப்போது சாதி சண்டை அதிகமாக இருக்கிறது.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சாதி சண்டை நடைபெறுகிறது. நாங்குநேரியில் ஒரு சாதிக்கும் இன்னொரு சாதிக்கும் சண்டை ஏற்படுகிறது. சாதியை பயன்படுத்தி அரசியல் கட்சிகள் ஆட்சிக்கட்டிலில் ஏறுகின்றன.

சாதி கட்சிகளை திருமாவளவன், ராமதாஸ் போன்றவர்கள் நடத்தி வருகிறார்கள். இந்து முன்னணியை பொறுத்தவரை சாதி பார்ப்பதில்லை அதை மறந்து தான் நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறோம்.

தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தப்படும். திருவாரூர் மாவட்டத்தில் 500 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு 10 இடங்களில் ஊர்வலம் நடத்தப்படும்.
அதேபோன்று ஆகஸ்ட் 27ஆம் தேதி தமிழகம் முழுவதும் 7000 இடங்களில் இந்து முன்னணி சார்பில் உழவாரப்பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 625

    0

    0