மதங்களை இழிவுப்படுத்தி பேசினால் சும்மா இருக்கமாட்டோம் : அமைச்சர் உதயநிதிக்கு அதிமுக எம்எல்ஏ எச்சரிக்கை!!
Author: Udayachandran RadhaKrishnan9 செப்டம்பர் 2023, 8:27 மணி
மதங்களை இழிவுப்படுத்தில் பேசினால் சும்மா இருக்கமாட்டோம் : அமைச்சர் உதயநிதிக்கு அதிமுக எம்எல்ஏ எச்சரிக்கை!!
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தனியார் திருமண மண்டபத்தில் மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும் ,கழக அமைப்பு செயலாளரும் ராஜன் செல்லப்பாவின் சகோதரியின் 50 ஆண்டு மணநாள் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பழனிக்கு வந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது: நாடு முழுவதும் ஒரே தேர்தல் நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்று இருக்கிறார். ஏனெனில் பல கட்ட தேர்தல் நடப்பதால் அரசு பணிகள் பாதிக்கப்படுகின்றன. அதேவேளையில் ஒரே தேர்தல் நடத்துவதில் உள்ள சட்ட சிக்கல்களை போக்க மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
மதுரையில் நடந்த அ.தி.மு.க. மாநாடு நாடே வியந்து பார்க்கும். வகையில் நடைபெற்றது. பின்னர் சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியதையும், கூட்டத்தில் சேகர்பாபு கலந்துகொண்டது பற்றியும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், மதங்களில் உள்ள மூட நம்பிக்கைகளை திராவிட இயக்கங்கள் எதிர்க்கும். அதேவேளையில் மதங்கள் மனிதர்களுக்கு ஒழுக்கத்தை கற்று கொடுக்கின்றன.
எனவே மதங்களை இழிவுபடுத்தும் வகையில் பேசினால் அது கண்டிக்கத்தக்கது. அதேபோல் அமைச்சர் சேகர்பாபு விவாதத்துக்கு உரிய வகையிலும் மற்றவர்கள் கண்டிக்கத்தக்க வகையிலும் தான் கருத்து தெரிவித்து வருகிறார்.
அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அதி.மு.க.வை சேர்ந்த அமைச்சர் வளர்மதி ஆகியோர் சார்ந்த வழக்குகள் மறுவிசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு உள்ளது பற்றி விசாரணை முடிவில் தெரியும் தற்போது தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் காரணமாக மக்கள் அதிருப்தியில் உள்ளனர் எனவே (வரக்கூடிய அனைத்து தேர்தல்களிலும் அதிமுக கூட்டணி வெற்றி வாகை சூடும் இவ்வாறு அவர் பேசினார்.
இதில் தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் ராஜ் சத்யன் ,முன்னாள் நாடாளுமன்ற குமாரசாமி , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குப்புசாமி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
0
1