உங்களுக்கு இனி ஓட்டு போட மாட்டோம் : திமுக அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் நேரடியாக சொன்ன மக்கள்.. வீடியோ!!!
நெல்லை கன மழையால் மாநகர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது தற்போது வரை மாநகரின் பல்வேறு இடங்களில் மின்சாரம் இல்லாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
இது போன்ற சூழ்நிலையில் நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான தங்கம் தென்னரசு மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட மறுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அதிகாரிகள் மேலப்பாளையம் வழியாக மாவட்டத்தின் பிற பகுதிக்கு சென்ற போது மேலப்பாளையத்தில் உட்புற பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் மெயின் ரோட்டில் நின்றபடி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் காரை மறித்துள்ளனர்.
அப்போது அவர்கள் ஐயா இரண்டு நிமிடம் உள்ளே வந்து பாருங்கள் கொஞ்சம் இறங்கி வாருங்கள் என பாதிக்கப்பட்ட தங்கள் பகுதியை பார்வையிட வரும்படி அமைச்சரிடம் கெஞ்சுகின்றனர்.
ஆனால் காரை நிறுத்த கூட மனம் இல்லாத அமைச்சர் காரில் அமர்ந்தபடி அங்கிருந்து நகர்ந்து செல்கிறார். உடனே அருகில் சென்ற மக்கள் விடியல் அரசு விடியல் அரசு என்று சொல்கிறீர்கள் கொஞ்சம் இங்கே வந்து பாருங்கள் உங்களுக்கு தான் ஓட்டு போட்டோம் கடந்த 25 ஆண்டுகளாக இது திமுகவின் கோட்டையாக இருக்கிறது.
இனி உங்களுக்கு ஓட்டு கிடையாது என ஆதங்கத்தோடு பேசுகின்றனர் இவை அனைத்தும் வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.