வேலூரில் மட்டும் 6 விளையாட்டு மைதானம் அமைப்போம்.. இளைஞர்களின் வாக்குகளை கவரும் வகையில் ஏசி சண்முகம் பேச்சு!!
Author: Udayachandran RadhaKrishnan24 February 2024, 9:48 pm
வேலூரில் மட்டும் 6 விளையாட்டு மைதானம் அமைப்போம்.. இளைஞர்களின் வாக்குகளை கவரும் வகையில் ஏசி சண்முகம் பேச்சு!!
வேலூர்மாவட்டம் தொரப்பாடியில் உள்ள அழகாம்பாள் திருமண மண்டபத்தில் புதிய நீதிக்கட்சி மற்றும் ஏ,.சி.எஸ் மருத்துவக்கல்லூரி சார்பில் அனைக்கட்டு தொகுதியில் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் வென்றவர்களுக்கு ரொக்கபரிசுகள் மற்றும் கிரிக்கெட் கிட்கள் வழங்கும் விழா புதிய நீதிகட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தலைமையில் நடந்தது இதில் ஏ.சி.எஸ் குழும தலைவர் அருண்குமார்,செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கிரிக்கெட் கிட்கள் மற்றும் ரொக்கபரிசுகள் சான்றுகள் கோப்பைகளை ஏ.சி.சண்முகம் வழங்கினார். முன்னதாக பேர்ணாம்பட்டு மற்றும் தொரப்பாடி பகுதிகளிலும் இலவச மருத்துவ முகாமானது நடந்தது.
பின்னர் விழாவில் புதிய நீதிகட்சிதலைவர் ஏ.சி சண்முகம் பேசுகையில் இலவச மருத்துவ முகாமால் மக்கள் அதிகமானோர் பயனடைந்துள்ளனர்.
வேலைவாய்ப்பை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பெற்று தந்துள்ளோம் மேலும் வேலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் இளைஞர்களுக்காக விளையாட்டு மைதானங்களை பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அமைத்து தருவேன் என பேசினார்