கோவையில் களைகட்டிய ஓணம் கொண்டாட்டம்… பிரபல கல்லூரியில் பூக்கோலமிட்டு மாணவ மாணவிகள் உற்சாகம்!!
வாமன அவதாரத்தில் உலகை அளந்த மாகாவிஷ்ணுவுக்கு, கேரளத்தை ஆண்ட மாகாபலி சக்கரவர்த்தி, தன் தலையை கொடுத்தார் என்பது புராண வரலாறு.
பாதாளத்துக்குச் சென்ற மகாபலி மன்னன், மகா விஷ்ணுவின் அருளால், ஆண்டுதோறும் சிங்க மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரத்தில், தனது நாட்டு மக்களைக் காண வருவதாகவும், அந்த நாளே ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
ஓணம் பண்டிகைக்கு 10 நாட்களுக்கு முன்பே, கொண்டாட்டங்கள் தொடங்கி நடைபெறும். மகாபலி மன்னனை வரவேற்க, மக்கள் தங்களின் வீட்டு வாசலில் அத்தப்பூ கோலமிட்டு, வீடுகளில் படையலிட்டு வழிபடுவது வழக்கம்.
கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தில் கடந்த பத்து நாட்களாகவே ஓணம் பண்டிகை களைகட்டியது. இந்த நிலையில் கற்பகம் கல்லூரியில் மாணவ மாணவியர் கேரள பாரம்பரிய உடை அணிந்தும் செண்டை மேளம் அடித்து கல்லூரியில் பூ கோலமிட்டு மகாராஜாவை அழைத்து சென்று நடன நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.