களைகட்டும் கூவாகம் திருவிழா… மிஸ் கூவாகம் இறுதிப் போட்டி மற்றும் தேதி அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
6 April 2023, 5:03 pm

தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு இணை செயலாளர் அருணா இந்த வருடம் கூவாகம் திரிவிழாவின் 50 சதவிகித போட்டிகள் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் நடைபெறுகிற நிலையில் மிஸ்கூவாகம் இறுதி போட்டி விழுப்புரம் தளபதி திடலில் மே 1 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கூவாகம் திருவிழாவிற்காக ஒவ்வொரு ஆண்டு தோறும் விழுப்புரத்திற்கு வருகை புரியும் திருநங்கைகளிடம் மூன்று மடங்கு கட்டணம் உயர்த்தி வசூலிப்பதாகவும் எத்தனை முறை புகார் அளித்தாலும் விடுதியின் மீது மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் 2 ஆயிரம் வசூலிக்கும் விடுதிகள் தங்களிடம் 8 ஆயிரம் வரை வசூலிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதனால் இந்த வருடம் கூவாகத்தில் பகுதியில் டெண்ட் அமைத்து தங்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

மேலும் திருநங்கைகள் கூத்தாண்டவர் கோவிலுக்கு ஒரு கிராம் முதல் ஒரு சவரன் வரை தாலியை தானமாக செலுத்துவதாகவும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் தங்க தாலிகள் அரசிடம் ஒப்படைக்கப்படுவதாகவும் ஒரு வருஷத்திற்கான தங்கத்தை விற்பனை செய்து திருநங்கைகளின் தேவைகளை அரசு செய்து கொடுத்தாலே பெரிய விஷயமாகவும் நூறு ஆண்டுகளாக கொடுத்த தங்கத்தின் நிலை என்ன அதை அரசு என்ன செய்தார்கள்.

இதுவரை அடிப்படை வசதிகள் செய்து தர ஏன் மறுக்கிறார்கள் எனவும் கேள்வி எழுப்பினர். மேலும் 40 வயது பூர்த்தயடைந்த திருநங்கைகளுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்கிய தமிழக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொண்டனர்.

மேலும் திருநங்கைகளின் வாழ்வாதாரம் வளர்ச்சி பெற ரயில்வே, அரசு மருத்துவமனைகளில் கேண்டீன்களில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 459

    0

    0