வார இறுதியில் மீண்டும் எழுச்சி பெற்ற பங்குச்சந்தைகள்… முதலீட்டாளர்கள் முகத்தில் வெளிப்பட்ட மகிழ்ச்சி..!!

Author: Babu Lakshmanan
27 October 2023, 11:13 am

வார இறுதியில் மீண்டும் எழுச்சி பெற்ற பங்குச்சந்தைகள்… முதலீட்டாளர்கள் முகத்தில் வெளிப்பட்ட மகிழ்ச்சி..!!

கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் ஆன சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. இந்த நிலையில், இந்த வார இறுதி நாளான இன்று பாஸிட்டிவாக பங்குச்சந்தை தொடங்கியிருப்பது முதலீட்டாளர்களிடையே இழந்த நம்பிக்கையை மீட்டுக் கொண்டு வந்துள்ளது.

அதன்படி, மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 584 புள்ளிகள் உயர்ந்து 63,732 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 164 புள்ளிகள் அதிகரித்து 19,021 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.

Coal India, SBI, Adani Enterpris, NTPC, Bajaj Auto போன்ற நிறுவனங்களில் பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. Dr Reddys Labs. ITC, HUL, JSW Steel, Kotak Mahindra போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.

அதேபோல, கட்டுமான நிறுவனங்களான RPP Infra Projects Ltd நிறுவனத்தின் பங்குகள் 1.80 புள்ளிகள் உயர்ந்து 78.70 புள்ளிகளுடனும், Coromandel Engineering Company Ltd நிறுவனத்தின் பங்குகள் 47.64 புள்ளிகளுடனும், ARSS Infra Structure Projects Ltd., நிறுவனத்தின் பங்குகள் 0.20 புள்ளிகள் உயர்ந்து 19.00 புள்ளிகளுடனும் வர்த்தகமாகிறது. CONSTRONICS INFRA LIMITED நிறுவனத்தின் பங்குகள் 11.93 புள்ளிகளுடன் வர்த்தமாகி வருகிறது.

  • Ethirneechal 2 cast updates விஜய் டிவியில் இருந்து சன் டிவி-க்கு தாவிய நடிகை…அப்போ எதிர்நீச்சல் 2 வில்லி இவுங்க தானா..!
  • Views: - 574

    0

    0