வார தொடக்கத்தில் அமர்க்களம்… ஏறுமுகத்தில் இந்திய பங்குச்சந்தைகள் ; முதலீட்டாளர்கள் குஷி…!!
Author: Babu Lakshmanan6 நவம்பர் 2023, 1:09 மணி
வார தொடக்கத்தில் அமர்க்களம்… ஏறுமுகத்தில் இந்திய பங்குச்சந்தைகள் ; முதலீட்டாளர்கள் குஷி…!!
கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் ஆன சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் வர்த்தகமாகி வந்தது. ஆனால் இந்த வாரத்தின் ஏற்றம் இறக்கத்துடன் பங்குச்சந்தைகள் காணப்பட்டு வந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று உயர்வுடன் தொடங்கியுள்ளது.
அதன்படி, இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ், 396 புள்ளிகள் உயர்ந்து 64760 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. அதோடு, தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 118 புள்ளிகள் அதிகரித்து 19,349 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.
Eicher Motors. Axis Bank, Hero Motocorp, Larsen, Grasim போன்ற நிறுவனங்களில் பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. Divis Labs, SBI, Titan Company, Cipla, HUL போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.
அதேபோல, கட்டுமான நிறுவனங்களான RPP Infra Projects Ltd நிறுவனத்தின் பங்குகள் 0.50 புள்ளிகள் சரிந்து 76.20 புள்ளிகளுடனும், Coromandel Engineering Company Ltd நிறுவனத்தின் பங்குகள் 2,26 புள்ளிகள் குறைந்து 43.00 புள்ளிகளுடனும், ARSS Infra Structure Projects Ltd., நிறுவனத்தின் பங்குகள் 0.45 புள்ளிகள் உயர்ந்து 19.45 புள்ளிகளுடனும் வர்த்தகமாகிறது. CONSTRONICS INFRA LIMITED நிறுவனத்தின் பங்குகள் 11.80 புள்ளிகளுடன் வர்த்தமாகி வருகிறது.
0
0