மனைவியை கணவன் அதிக நேரம் தூக்கும் விநோத போட்டி.. பொங்கலை முன்னிட்டு நடந்த சுவாரஸ்யம்… வைரல் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
17 January 2024, 12:45 pm

மனைவியை கணவன் அதிக நேரம் தூக்கும் விநோத போட்டி.. பொங்கலை முன்னிட்டு நடந்த சுவாரஸ்யம்… வைரல் வீடியோ!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நடுப்பட்டி கிராமத்தில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் சட்டி உடைக்கும் போட்டி, கழுகு மரம் ஏறும் போட்டி, லக்கி கார்னர், கபடி போட்டி, ஓட்டப்பந்தயம், உட்பட ஏராளமான போட்டிகள் நடைபெற்றது.

லக்கி கார்னர் என்ற போட்டியில் ஜீவிகா என்ற கல்லூரி மாணவி வெற்றி பெற்றார். ஆண்கள் பிரிவில் நடைபெற்ற லக்கி கவர்னர் போட்டியில் சிறுவர் விமலேஷ் வெற்றி பெற்றார்.

இதில் கணவர்கள் தன் மனைவியை அதிக நேரமாக தூக்கி வைத்திருக்கும் வினோத போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 12 ஜோடிகள் கலந்து கொண்டனர். இளம் கணவன் மனைவிகள் மகிழ்ச்சியாக இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.

நேரம் ஆக ஆக கணவருக்கு வேர்த்து கொட்டியதை மனைவிகள் துடைத்துவிட்டு தனது கணவர்களுக்கு உறுதுணையாக இருந்தனர். போட்டி ஆரம்பித்து ஒரு மணி நேரமாக கடைசிவரை தனது மனைவியை கைவிடாமல் வைத்திருந்த கார்த்தி சௌடீஸ்வரி தம்பதியினர் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற கணவனும் மனைவியும் அத்தனை கூட்டத்தையும் பொருட்படுத்தாமல் சினிமாவில் வருவது போல் இருவரும் கட்டி அணைத்துக் கொண்ட சம்பவம் அனைவரையும் நிகழ்ச்சியில் ஆழ்த்தியது. வெற்றி பெற்ற தம்பதியினருக்கு ஆயிரத்து ஒரு ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!