என்ஐஏ விசாரணை உத்தரவை வரவேற்கிறோம்.. ஆனா காவல்துறையை இப்படி பயன்படுத்தாதீங்க : CM ஸ்டாலினுக்கு அண்ணாமலை அறிவுரை!!

Author: Udayachandran RadhaKrishnan
26 October 2022, 9:55 pm

கோவை சம்பவத்தை விசாரிக்க தேசிய புலனாய்வு முகமைக்கு முதல்வர் பரிந்துரைத்ததை தமிழக பாஜக வரவேற்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கோவை தற்கொலைப் படை தாக்குதலின் விசாரணையை தமிழக முதல்வர் தேசிய புலனாய்வு முகமைக்குப் பரிந்துரைத்ததை தமிழக பாஜக வரவேற்கிறது.

இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க சில ஆலோசனைகளை உங்களுக்கு வழங்க கடமைப்பட்டுள்ளோம்.

1) தேச விரோத சக்திகளை இரும்புக் கரம் கொண்டு அடக்குங்கள்.

2) தமிழக காவல்துறையின் உளவுத்துறை உலக புகழ் பெற்றது. சமீப காலமாக ஏற்பட்டிருக்கும் தொடர் தோல்விகளுக்குப் பின்பு உளவுத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களை உடனடியாக முன்னெடுங்கள்.

3) திமுகவினர் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு காவல்துறையினரை பயன்படுத்தாமல், தமிழக காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விடுங்கள். நீங்கள் பதவி ஏற்கும் போது அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளைப் பெற்று அரசை நடத்துவீர்கள் என்ற உறுதிமொழியை அளித்தீர்கள். மேல் குறிப்பிட்ட ஆலோசனைகளை நீங்கள் நடைமுறைப்படுத்துவீர்கள் என்று நம்புகிறோம்.

தேசத்தின் நன்மையை கருத்தில் கொண்டு நீங்கள் எடுக்கும் அனைத்து முன்னெடுப்புகளுக்கும் தமிழக பாஜக உறுதுணையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

  • Two years Bond with Raashi khanna Says Popular Actor 2 வருடமாக ராஷி கண்ணாவுடன்… சத்தியத்தை கசிய விட்ட பிரபல நடிகர்..!!