ED ரெய்டை முறியடித்த கேடியே வருக வருக… கோவை நகர் முழுவதும் வலம் வரும் போஸ்டரால் பரபரப்பு!!
கோவை மாவட்டத்தில் கனிமப் பொருள்கள் எடுப்பது சப்ளை செய்வது போன்றவற்றில் புரோக்கர்கள் தலையீடு அதிகமாய் விட்டது.
அமைச்சர் ஆளு என சொல்லி சிலர் கோவை மாவட்டத்தில் கல்குவாரிகள் , கிரஷர் , டிப்பர் லாரிகள் , ஜேசிபி போன்றவற்றில் வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
ராயல்டி ஸ்லிப் , ஜல்லி, எம் சாண்ட் கிராவல் மண் எடுப்பது என அனைத்தும் இந்த அதிகார புரோக்கர்களின் கட்டுப்பாட்டில் போய்விட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் டிப்பர் மற்றும் ஜேசிபி உரிமையாளர்கள் சார்பில் புகார் மனு தரப்பட்டது.
இதில் அதிகார புரோக்கர்கள் பெயர்கள் மற்றும் அவர்கள் வாங்கும் லஞ்ச தொகை குறிப்பிட்டு பகிரங்கமாக புகார் மனு தரப்பட்டது.
இந்த நிலையில் கோவை நகர் முழுவதும் ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அதில், ED ரெய்டை முறியடித்த கேடி கரிகாலன் அவர்களே வருக வருக என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இப்படிக்கு தங்களால் பாதிப்புக்கு உள்ளாக காத்திருக்கும் கல்குவாரி உரிமையாளர்கள் மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் என அச்சிடப்பட்டுள்ளது.
கரிகாலன் புகைப்படத்தை தொடர்ந்து அவருடைய போர்ப்படை தளபதி கோவிந்தராஜ் என்பவரின் புகைப்படத்தை வைத்து சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
கோவை நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சுவரொட்டியை பிரபல அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்ஜேவாக இருந்து தனது கடின உழைப்பால் சினிமா பக்கம் வந்தவர் சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில். சின்னத்திரையில் தொடர்ந்து ரசிகர்களை…
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
This website uses cookies.