உயிரிழந்த விசாரணை கைதிக்கு இத்தனை இடங்களில் காயங்களா? பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!
Author: Udayachandran RadhaKrishnan4 May 2022, 7:50 pm
சென்னை : உயிரிழந்த விக்னேஷின் தலை, கண் புருவம், தாடை உள்ளிட்ட உடலின் 13 இடங்களில் காயம் உள்ளது என பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை புரசைவாக்கம்,கெல்லீஸ் சிக்னல் அருகே கடந்த வாரம் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது,ஆட்டோவில் சென்று கொண்டிருந்த திருவல்லிக்கேணியை சேர்ந்த சுரேஷ் மற்றும் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ் ஆகியோரிடம் கஞ்சா மற்றும் கத்தி இருந்ததாக கூறி காவல்துறையால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.இதனையடுத்து காவல்துறை விசாரணையில் விக்னேஷ் என்பவர் உயிரிழந்தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், விக்னேஷின் உடல் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில், உடல்கூறாய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில், உயிரிழந்த விக்னேஷின் தலை, கண் புருவம், தாடை உள்ளிட்ட உடலின் 13 இடங்களில் காயம் உள்ளது என கூறப்படுகிறது.