உண்மையை தெரிஞ்சுட்டு பேசுங்க : முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்ப்புக்கு மேற்கு வங்க ஆளுநர் விளக்கம்!!
Author: Udayachandran RadhaKrishnan13 February 2022, 6:29 pm
மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும், அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று சட்டப்பேரவையை முடக்குவதாக ஆளுநர் அறிவித்திருந்தார்.
அரசியலமைப்பு சட்டம் 174வது பிரிவு வாயிலாக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி மேற்கு வங்க சட்டப்பேரவையை பிப்ரவரி 12 முதல் முடக்கி வைப்பதாக ஆளுநர் உத்தரவிட்டார்.
இதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் மேற்கு வங்க சட்டமன்றத்தை ஆளுநர் முடக்கியது விதிமுறை மற்றும் மரபுகளுக்கு எதிரானது. அரசியலமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்த மாநிலத்தின் தலைவர் முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை கொடுப்பதில்தான் ஜனநாயகத்தின் அழகு உள்ளது என்று பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு மேற்கு வங்க ஆளுநர் மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து ஆளுநர் வெளியிட்ட ட்விட்டர் குறிப்பில், 11ம் தேதி மாலை மேற்கு வங்க சட்டப்பேரவை விவகாரங்கள் அமைச்சரவையில் இருந்து அடுத்த சட்டப்பேரவை கூட்டத் தொடர் மார்ச் 2ம் தேதி தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அரசு கேட்டுக்கொண்டதாலயே சட்டப்பேரவையை முடித்து வைத்ததாகவும், தமிழக முதல்வர் ஸ்டாலினின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.