ஊசி ஏத்தி கொன்றுங்க.. போலீஸ் மட்டும் ‘அப்படி’ செஞ்சிருந்தா?.. தீக்குளித்தவரின் உறவினர்கள் கடும் வேதனை!

Author: Hariharasudhan
21 January 2025, 6:55 pm

சென்னையில், காவல் நிலையம் முன்பு தீக்குளித்த நபரின் வேதனையைத் தன்னால் தாங்க முடியவில்லை என அவரது சகோதரி கூறியுள்ளார்.

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தின் முன்பு, நேற்று இரவு இளைஞர் ஒருவர் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், அவர் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதனையடுத்து, அவர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, இந்தச் சம்பவம் குறித்து ஆர்.கே.நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர், புளியந்தோப்பு திருவிக நகர் 7வது தெருவைச் சேர்ந்த ராஜன் (42) என்பதும், இவருக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளதும் தெரிய வந்துள்ளது.

மேலும், இது தொடர்பாக போலீசார் தெரிவிக்கையில், “நேற்று (ஜன.20) ராஜன் உடன் வேலை பார்த்து வந்த கொருக்குப்பேட்டை, பாரதி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வரும் மாதவன் (46) என்பவர் உடன் வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில், ராஜனை, மாதவன் தாக்கியுள்ளார்.

A man sets Fire  himself before RK Nagar Police Station in Chennai

இது குறித்து பட்டறை உரிமையாளர் முருகனிடம் ராஜன் தெரிவித்துள்ளார். எனவே, முருகன், இருவரையும் சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து, நேற்று மதியம் ராஜன், அண்ணாநகர் வேலன்சத்திரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்திக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த மாதவனுக்கும், ராஜனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில், மாதவன், தனது நண்பரான கொருக்குப்பேட்டை ரயில்வே காலனியைச் சேர்ந்த பொங்கல் என்கிற அருண்குமார் (26) என்பவருடன் சேர்ந்து ராஜனைத் தாக்கியுள்ளனர்.

எனவே, ராஜன், நேற்று பிற்பகல் ஆர்கே நகர் காவல் நிலையத்திற்குச் சென்று, தன்னை இருவர் தாக்கி விட்டதாக வாய்மொழியாக புகார் அளித்துள்ளார். அப்போது, அங்கு பணியில் இருந்த போலீசார் ஒருவர், ராஜனிடம் புகார் எழுதித் தருமாறுச் சொல்லியுள்ளார். ஆனால், மதுபோதையில் இருந்த ராஜன் கோபத்தில் புகார் அளிக்காமல் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, நேற்று இரவு ஆர்கே நகர் காவல் நிலையத்திற்கு வந்த ராஜன், திடீரென தான் கொண்டு வந்திருந்த 5 லிட்டர் பெட்ரோலை உடலில் ஊற்றி, தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ராஜனை மீட்ட போலீசார், அவரை கேஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

90 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் ராஜனிடம், ஜார்ஜ் டவுன் 15வது நீதிமன்ற நடுவர் மரண வாக்குமூலம் பெற்றுச் சென்றுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து ஆர்கே நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மாதவன் மற்றும் அவரது நண்பர் பொங்கல் என்கிற அருண்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மகள் என்று தெரிந்தும் மது போதையில்… தந்தை செய்த கொடூரம்!

இந்த நிலையில், ராஜனின் சகோதரி தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “எனது தம்பியை உடனடியாக ஊசியை ஏற்றிக் கொலை செய்து விடுங்கள். அவன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையை என்னால் பார்க்க முடியவில்லை” எனக் கூறி கதறி அழுதுள்ளார்.

அதேபோல், ராஜனின் மனைவியான விஜியும், “போலீசார் எனது கணவரைத் திட்டி அனுப்பியதால், மன உளைச்சலில் இது போன்ற ஒரு முடிவை எடுத்துள்ளார். போலீசார் மட்டும் ஆறுதலாகப் பேசி அனுப்பி இருந்தால், எனது கணவர் எங்களை தவிக்க வைத்திருக்க மாட்டார்” எனக் கூறிவிட்டு கதறி அழுததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!
  • Leave a Reply