தமிழகம்

தாயும் சேயும் அடுத்தடுத்து உயிரிழப்பு.. ஆம்பூரில் இருந்து சேலம் வரை சென்றும் பலனில்லை!

திருப்பத்தூர், ஆம்பூரைச் சேர்ந்த பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு இறந்த நிலையில், குழந்தையும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த எல்.மாங்குப்பத்தைச் சேர்ந்தவர்கள் விஜய் – துர்காதேவி தம்பதி. இவர்கள் இருவரும் காதலித்து கலப்பு திருமணம் செய்த நிலையில், கடந்த அக்டோபர் 10ஆம் தேதி, தனது முதல் பிரசவத்திற்காக ஆம்பூர் அரசு மருத்துவனையில் துர்காதேவி அனுமதிக்கப்பட்டு உள்ளார்.அப்போது துர்காதேவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில், துர்காதேவிக்கு கர்ப்பப்பையில் இருந்து அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டு உள்ளதால், அவரை மருத்துவர்கள் திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.பின்னர், மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, அங்கும் சிகிச்சை அளிக்க முடியாமல், இறுதியாக மருத்துவர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

இந்த நிலையில், நேற்றைய முன்தினம் (நவ.13) துர்காதேவி உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவரது உடல் நேற்று (நவ.14) சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. இதனிடையே, துர்காதேவிக்கு பிறந்த குழந்தை தர்மபுரி அரசு மருத்துவமனையில் மிக மோசமான நிலையில் இன்குபேட்டரில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது. ஆனால், அந்த குழந்தையும் நேற்று உயிரிழந்தது.

அதனைத் தொடர்ந்து, தாய், சேயின் உடலை நேற்று இரவு அவரது உறவினர்கள் அடக்கம் செய்தனர்.இந்நிலையில், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் துர்காதேவி அனுமதிக்கப்பட்ட போது, அவருக்கு முறையான சிகிச்சை அளிக்காததாலே உயிரிழந்ததாகக் கூறியும், மருத்துவர் சியாமளா மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், அவரது உறவினர்கள் ஆம்பூர் – பேர்ணாம்பட் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: எச்சில் துப்பிய அமீர் கான்..படத்தை உதறி தள்ளிய நடிகை.. கொடுமையின் உச்சம்..!

அது மட்டுமல்லாமல், தனது மனைவி மற்றும் பிறந்த குழந்தை இறப்பதற்கு காரணமாக இருந்த ஆம்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர் சியாமளா மற்றும் செவிலியர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என துர்காதேவியின் கணவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உள்ளார். இந்நிலையில், துர்காதேவியிற்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் சியாமளாவை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பணியிடம் மாற்றம் செய்து திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் கண்ணகி உத்தரவிட்டு உள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

7 hours ago

எங்க கூட்டணிக்கு வந்தால் விஜய் வெற்றி பெற முடியும்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் கணிப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…

8 hours ago

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரை வந்த சிவனடியார்கள் : ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு!

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…

8 hours ago

போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க வந்த பெண் மானபங்கம்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு!!

திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…

8 hours ago

திடீரென ரஜினி கொடுத்த பரிசு.. ஆச்சரியத்தில் ஆடிப்போன இயக்குநர்..!!

இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…

9 hours ago

அடுத்தடுத்து மாயமான இளைஞர்கள் கொன்று புதைப்பு.. வெளியான பகீர் தகவல்!

கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…

9 hours ago

This website uses cookies.