தமிழகம்

பாலியல் தரகராகவே மாறிய தோழி.. பேரம் பேசி வன்கொடுமை.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!

மனவளர்ச்சி குன்றிய மாணவியை குறிப்பிட்ட செயலி மூலம் பாலியல் தொழிலில் தோழியே ஈடுபடுத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சென்னை: சென்னை அடுத்த அயனாவரத்தைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவியை, கடந்த ஓராண்டாக அவரது தோழியின் உதவியுடன் ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக, பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை அளித்த புகார் அளித்தார். இதன் பேரில், எழும்பூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதன்படி, இந்த வழக்கில் திருவள்ளூரைச் சேர்ந்த நந்தனம் கல்லூரி மாணவர் சுரேஷ் (20), அவரது நண்பரான பள்ளி மாணவர் நரேஷ் (19) ஆகியோரை கடந்த டிசம்பர் 7ஆம் தேதி தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, அரக்கோணத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் அம்பத்தூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணி என்கிற சுப்பிரமணி உள்பட 7 பேரை தனிப்படையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியுடன் ஒன்றாக படித்து வரும் ஆண் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து, அவர்களுக்கு உடந்தையாக இருந்த அரக்கோணத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி சந்தியா என்பவர், அரக்கோணம் அருகே உறவினர்கள் வீடுகளில் தலைமறைவாக இருந்தார்.

இதனையடுத்து, அந்த மாணவியையும் நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேரை தனிப்படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர். பின்னர், இது தொடர்பாக கல்லூரி மாணவி சந்தியாவிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்த் உள்ளனர்.

அதில், “அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த மாணவி சந்தியா, சென்னை அண்ணா சாலையில் உள்ள மகளிர் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தன்னுடன் படிக்கும் 40 சதவீத மன வளர்ச்சி குன்றிய மாணவி டன் நல்ல நட்பில் இருந்து வந்துள்ளார். மேலும், அந்த மாணவி எப்போதும் ஆட்டோவில் தான் கல்லூரிக்கு வருவார்.

மேலும், சந்தியா எதைச் சொன்னாலும் அதனை அம்மாணவியும் செய்வார். இதனால் சந்தியா சில நேரங்களில் அம்மாணவிக்கு, வீட்டில் இருந்தே உணவு எடுத்து வந்து கொடுத்துள்ளார். அந்த அளவுக்கு இருவரும் நல்ல நட்பாக இருந்துள்ளனர். இந்த நிலையில் தான், சந்தியா ரயில் பயணம் மூலம் நந்தனம் கல்லூரியைச் சேர்ந்த, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் அறிமுகமாகி உள்ளார்.

அவருக்கு இந்த மாணவியை சந்தியா அறிமுகம் செய்து வைத்துள்ளார். முதல் அறிமுகத்தன்றே, சுரேஷ் விலை உயர்ந்த சாக்லேட் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். அம்மாணவிக்கு சாக்லேட் மிகவும் பிடிக்கும். எனவே, அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, சுரேஷ் தனது ஊரைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவர் உடன், அம்மாணவியை பெரியமேடு பகுதியில் உள்ள லாட்ஜுக்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார்.

அதனைத் தொடர்ந்து, சுரேஷ் மூலம் அவரது சக நண்பர்களான கல்லூரி மாணவர்கள், மாணவியை தவறாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். அதற்கு சந்தியாவும் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளார். இதற்காக பாதிக்கப்பட்ட மாணவியை, சந்தியா தனது செல்போன் எண் உதவியுடன் ‘ஸ்னாப்’ என்ற பாலியல் செயலியில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.

இதன் மூலம் திருப்பூரைச் சேர்ந்த கவி, கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த ரோஷன், கார்த்திக், அம்பத்தூரைச் சேர்ந்த பாண்டி மற்றும் திருத்தணியைச் சேர்ந்த மணி ஆகியோரிடம் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை பணம் பெற்றுள்ளார். இவ்வாறு, ஒவ்வொரு வாரமும் குறைந்தது 4 மாணவர்கள் பாதிக்கப்பட்ட மாணவியை அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: வடிவேலு கூட நடிக்கணும்னா அதை பண்ணியே ஆகணும்.. நான் அனுபவிச்ச வேதனை : கோவை சரளா ஓபன் டாக்!

இதனால் சந்தியா, ஒருகட்டத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு முழு பாலியல் தரகராகவே செயல்பட்டு வந்ததுள்ளார். சந்தியாவுக்கு செயலி மூலம் கிடைக்கும் பணத்தில், சிறு தொகையை அம்மாணவிக்கு தாராளமாக செலவு செய்து கைக்குள் கொண்டு வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் அம்மாணவியை, மாணவர்களே சந்தியாவுக்குத் தெரியாமல் அழைத்துச் சென்று வந்துள்ளனர். இந்த நிலையில் தான், மாணவிக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகுதான், அவரது தந்தைக்கு விவரம் தெரிந்து போலீசில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

3 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

4 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

4 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

4 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

5 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

5 hours ago

This website uses cookies.