அதிமுகவினருடன் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன? கோவை திரும்பிய வானதி சீனிவாசன் கோபத்தோடு சொன்ன பதில்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 September 2023, 4:47 pm

அதிமுகவினருடன் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன? கோவை திரும்பிய வானதி சீனிவாசன் கோபத்தோடு சொன்ன பதில்!!

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன் தனக்கு சில மீடியாக்கள் அழைத்து கேட்டதாகவும் தான் பேச்சுவார்த்தையில் உடனிருந்ததாக தவறான செய்தி வெளியிட்டிருக்கின்றனர் என்றும் கூறினார்.

மேலும் நேற்று மாலை முழுவதும் கட்சி பணிகளில் இருந்ததாகவும், தொலைக்காட்சி செய்தியை பார்த்து தான் அதிமுக தலைவர்கள் டெல்லி வந்து இருப்பது தெரியவந்ததாகவும் கூறினார்.

அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்தியதும் தெரியாது என கூறிய அவர், நான் பேச்சுவார்த்தையின் போது உடன் இருந்ததாக சொல்வது முற்றிலும் தவறான கருத்து என்றார்.

மகளிர் அணி தலைவராக பிரதமரின் பாராட்டு விழாவை முன்னின்று நடத்துவது தொடர்பாகவே டெல்லி சென்றதாக வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

வானதி சீனிவாசனை தொடர்ந்து டெல்லியில் இருந்து கோவை விமான நிலையம் வருகை தந்த அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்து பதற்றத்துடன் கார் ஏறி சென்றார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி
  • Close menu