நடிகை குஷ்புவுக்கு என்னாச்சு? மருத்துவமனையில் திடீர் அனுமதி : ஆறுதல் கூறும் ரசிகர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 June 2023, 9:17 pm

குஷ்பு நடிகையாக மட்டுமல்லாமல் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். திமுகவில் இருந்த குஷ்பு, பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

பின்னர் பாஜகவில் இணைந்த குஷ்புவுக்கு, எம்எல்ஏ பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது பா.ஜ.க. நிர்வாகியான குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமானராகவும் உள்ளார்.

இந்த நிலையில் திடீரென அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அவர், இடுப்பு எலும்பிற்காக சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் முழுமையாக குணமாகும் என்று நம்புகிறேன் எனவும் பதிவிட்டுள்ளார்.

  • Mohanlal Appreciates Lubber Pandhu Team லப்பர் பந்து வேற லெவல் படம்.. திறமையா எடுத்திருக்காங்க : உச்ச நடிகர் பாராட்டு!
  • Views: - 573

    0

    0