அமைச்சர் மதிவேந்தனுக்கு என்னாச்சு? கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கண்காணிப்பு!
Author: Udayachandran RadhaKrishnan23 January 2024, 11:04 am
அமைச்சர் மதிவேந்தனுக்கு என்னாச்சு? கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கண்காணிப்பு!
கடந்த 2021 தேர்தலில், முன்னாள் அமைச்சர் சரோஜாவை தோற்கடித்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மதிவேந்தன்.
சுற்றுலாத்துறை அமைச்சர் பதவி இவரை தேடிவந்தது.
பிறகு, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றபோது, சில அமைச்சரது துறைகள் மாற்றப்பட்டது. அப்போது, மதிவேந்தனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த சுற்றுலாத்துறை இவரிடமிருந்து பறிக்கப்பட்டு, அமைச்சர் ராமச்சந்திரனுக்கு ஒதுக்கப்பட்டது.
திடீரென அமைச்சரின் பதவி பறிக்கப்பட்டது பரபரப்பாக அப்போது பேசப்பட்டது.. காரணம், சுற்றுலாத்துறை என்ற வளம் கொழிக்கும் துறையை ஒதுக்கீடு செய்தும்கூட, மதிவேந்தனின் செயல்பாடுகள் முதல்வருக்கு திருப்தியை தரவில்லை என்று சொல்லப்பட்டது.. படித்தவர், டாக்டர் என்பதால் சுற்றுலாத்துறையை சிறப்புடன் நிர்வகிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், அமைச்சரின் செயல்பாடுகள் குறித்த ரிப்போர்ட்களால் அதிருப்தி கொண்டாராம் ஸ்டாலின். எனவே, சுற்றுலாத்துறை பதவி பறிக்கப்பட்ட நிலையில், அமைச்சரவை மாற்றத்தின்போது மதிவேந்தன் மீண்டும் இடம்பெறுவாரா என்றெல்லாம் திமுகவில் பேச்சுக்கள் அடிபட்டன.
ஆனால், துறையை மட்டும் மாற்றி தந்து, மதிவேந்தனுக்கு இன்னொரு வாய்ப்பை தந்தார் முதல்வர் ஸ்டாலின். வனத்துறை அமைச்சராக மதிவேந்தன் நியமனம் செய்யப்பட்டார். இதற்குபிறகு, தனக்கு ஒதுக்கப்பட்ட துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்து முதல்வரின் பாராட்டுக்களை பெற்றே தீர்வது என்ற முடிவெடுத்து, தீவிரமாகவும், திறன்படவும் செயலாற்ற துவங்கினார் மதிவேந்தனர்.. பல்வேறு அதிரடிகளையும் வனத்துறை சார்பாக மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், சமீபகாலமாகவே, அமைச்சர் மதிவேந்தனுக்கு குடலிறக்கம் இருந்து வந்துள்ளது. இதனால், அவதிப்பட்டு வந்த அவருக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் ஆலோசனை சொல்லி உள்ளனர்.