ராமதாஸ்க்கு என்னாச்சு? சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி : பாமக சொன்ன பரபரப்பு தகவல்!

Author: Udayachandran RadhaKrishnan
31 July 2024, 11:52 am

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தகவல் வெளியானதை அடுத்து பாமகவினர் மருத்துவமனைக்கு வரத் தொடங்கினர்.

ஆனால் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

2 மாதங்களுக்கு ஒரு முறை அப்பல்லோவில் ராமதாஸ் உடல் பரிசோதனை மேற்கொள்வது வழக்கம் என்றும் அதுபோல் தான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: வீடு புகுந்து கேட்டை உடைத்த காட்டு யானை : கோவை தொண்டாமுத்தூர் மக்கள் ஷாக்.. அதிர்ச்சி வீடியோ!

மேலும், ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான பரிசோதனைகள் முடிந்தவுடன் ராமதாஸ் மருத்துவமனையில் இருந்து சென்று விடுவார் என்று பா.ம.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!