புலம்பிட்டே இருந்தா எப்படி..? மகளிர் உரிமைத் தொகை கேட்ட மூதாட்டி மீது திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வன் கோபம்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 April 2024, 4:38 pm

புலம்பிட்டே இருந்தா எப்படி..? மகளிர் உரிமைத் தொகை கேட்ட மூதாட்டி மீது திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வன் கோபம்!!

தேனி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் இன்று தேனி அருகே உள்ள அரண்மனைபுதூர், கொடுவிலார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது பிரச்சாரத்தில் பேசிய தங்க தமிழ்ச்செல்வன் உங்கள் வீட்டுப் பிள்ளை உங்களுக்காக உழைக்கும் நான் நீங்கள் ஓட்டு போட்டால் உங்களுக்கு நல்லது செய்வேன்.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நீங்கள் வாக்களித்தீர்கள் அவர் வெற்றி பெற்று சொல்லிய வாக்குறுதியை நிறைவேற்றி விட்டார். அதேபோல் தேனி தொகுதியில் நான் வெற்றி பெற்றால் 500 ரூபாய்க்கு சிலிண்டர் என ஸ்டாலின் அறிவித்துள்ளார் உங்களுக்கு 600 ரூபாய் மிச்சம் ஆகிறது.

ஒரு லிட்டர் பெட்ரோல் தற்போது 105 அதை 70 ரூபாய்க்கு தருவேன் என ஸ்டாலின் கூறியுள்ளார் 35 ரூபாய் மிச்சம் ஆகிறது. பெட்ரோல், சிலிண்டர் விலை குறைப்பு, மகளிர் உரிமைத் தொகை என திமுக வெற்றி பெற்றால் மாதம் 5000 ரூபாய் உங்களுக்கு குடும்பத்திற்கு கிடைக்கும்.

உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாக்களியுங்கள் உங்களை நம்பி செல்லலாமா வெற்றி பெற வைத்து விடுவீர்களா என பிரச்சார கூட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வன் பேசினார்.

முன்னதாக கூட்டத்தில் இருந்த மூதாட்டி ஒருவர் மகளிர் உரிமைத் தொகை எனக்கு வரவே இல்லை என கூறினார். அதற்கு தங்கத்தமிழ்செல்வன், என்ன பிரச்சனை என்று பார்த்து நிச்சயம் வாங்கித் தருகிறேன் என கூறிவிட்டு வாக்கு சேகரித்தார்.

ஆனால் அப்போது தொடர்ந்து மூதாட்டி மகளிர் உரிமைத் தொகை பற்றி பேசிக் கொண்டே இருக்க, கடுப்பான தங்கத்தமிழ்ச்செல்வன், மகளிர் உரிமைத் தொகை வாங்கியவர்கள் சந்தோஷமாக இருக்கின்றனர். வாங்காதவர்கள் என்னிடம் கோரிக்கை வைத்துள்ளீர்கள், நான் நடவடிக்கை எடுப்பதாக சொன்னேன். ஆனால் புலம்பிக்கொண்டே இருந்தால் எப்படி என மூதாட்டியிடம் கோபம் கொண்ட காட்சிகள் வைரலாகி வருகிறது.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 270

    0

    0