என்னங்க இதுல எல்லாமே கிடைக்குது.. Grok AI என்றால் என்ன? பயன்பாடுகள் என்னென்ன?

Author: Hariharasudhan
14 March 2025, 8:54 am

Grok AI தனி செயலியாக அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது X தளத்திலும் தனி ஐகானாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்து பயனர்களை குஷிப்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர்: எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தின் Grok AI அசிஸ்டண்ட்டுக்கு பிரத்யேக செயலி இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. எக்ஸ் சமூக வலைத்தளத்துக்கு வெளியே இதனை பிரபலப்படுத்தும் நோக்கில் எலான் மஸ்கின் நிறுவனம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

மேலும், இந்த செயலியை எக்ஸ் ஏஐ (Xai) வடிவமைத்துள்ளது. பயனர்களிடையே பிணைப்பை ஏற்படுத்தும் வகையில் உரையாடல் பாணியில் இந்தச் செயலி உள்ளது. இதன் மூலம் பயனர்கள் படங்களை உருவாக்கவும், தங்களது உரையைச் சுருக்கவும், கேள்விகளுக்கு பதிலளிக்கவும் முடியும், chatgpt போன்று.

ஆனால், முன்னதாக, எக்ஸ் தளத்தில் ப்ரீமியம் சந்தாதாரர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் Grok AI அறிமுகமானது. தற்போது எக்ஸின் ஏஐ அசிஸ்டண்ட்டை கட்டணமின்றி பயன்படுத்தலாம். இருப்பினும், இதில் சில கட்டுப்பாடுகளும் உள்ளன. ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் 10 ரெக்வெஸ்ட், நாள் ஒன்றுக்கு மூன்று படங்கள் மட்டுமே பயனர்கள் பெற முடியும்.

Grok AI

இது செயலி வடிவில் பயன்படுத்தும் பயனர்களுக்கும் அடங்கும். இதனை ஆப்பிள், கூகுள், எக்ஸ் கணக்கு, மின்னஞ்சல் முகவரி என ஏதேனும் ஒரு பயனர் ஐடியைப் பயன்படுத்தி, இந்த செயலிக்குள் Login செய்து பயன்படுத்தலாம். தகவலின் துல்லியம் மற்றும் இமேஜ் அவுட்புட் என மற்ற ஏஐ தளங்கள் எதிர்கொண்டு வரும் சவாலை Grok AI-யும் எதிர்கொண்டு வருகிறது.

இதையும் படிங்க: ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..!முக்கிய ஹீரோயினுடன் கேமியோ ரோலில் நடிக்கும் சமந்தா.!

இந்த நிலையில், புதிய பயன்பாட்டை எக்ஸ் தளம் அறிமுகப்படுத்தியுள்ளது. இனி, ட்விட்டர் பயனர்கள் தங்கள் பதிவுகளின் பதில்களில் “@grok” என்று டேக் செய்து, எந்தக் கேள்வியையும் கேட்கலாம். க்ரோக் AI, பதிவின் சூழலை தானாகப் புரிந்துகொண்டு, மின்னல் வேகத்தில் பதிலளிக்கும் திறனைக் கொண்டுள்ளது.

இது வெறும் டெக்ஸ்ட் பதில்களை மட்டுமல்ல, படங்கள் மற்றும் வீடியோக்களுக்கும் பதிலளித்து, ட்விட்டர் பயனர்களுக்கு ஒரு புதிய தகவல் ஹப்பாக மாறுகிறது. அது மட்டுமின்றி, Grok AI-க்கு தனி ஐகானும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலமும் நாம் தேவையான தகவல்களைக் கேட்டுப் பெறலாம்.

  • Actress Sneha has a rare disease.. Prasanna praises her courage! நடிகை சினேகாவுக்கு அரிய வகை நோய்.. தைரியத்தை பாராட்டும் பிரசன்னா!
  • Leave a Reply