கோவை அரசு சட்டக் கல்லூரி முதல்வர் மீது பரபரப்பு புகார்.. வீதியில் இறங்கிய மாணவர்களால் பரபரப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
21 February 2023, 9:58 pm

கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: மாணவர்கள் மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும். காரணம் இல்லாமல் இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்களை திரும்ப கல்லூரியில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

சட்டக் கல்லூரியில் ஹாரிதா என்ற மாணவி கல்லூரியில் சேரும் போது கொடுத்த டிசி காணவில்லை என்று கல்லூரி சார்பாக தெரிவித்து உள்ளனர் ‌.

இதையடுத்து மூன்றாம் ஆண்டு படித்துவரும் சேக் முகம்மது என்ற மாணவர் கல்லூரிக்கு சென்று கல்லூரி ஊழியர்களை தகாத வார்தையில் திட்டியதாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் வடவள்ளி காவல் நிலையத்தில் கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் அவர்கள் ஷேக் முகமது மற்றும் ஹாரிதா மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
அதை தொடர்ந்து இருவரையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உள்ளது. இரண்டாம் ஆண்டு பயின்று வரும் தரணிஸ் என்ற மாணவனை காரணம் இன்றி சஸ்பெண்ட் செய்ததாக கூறப்படுகிறது.

இதனை கண்டிக்கும் விதமாகநேற்று சட்டக் கல்லூரி வளாகத்தில் முன்பு மாணவர்கள் நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்து விதமான சஸ்பெண்ட் ஆணையை திரும்ப பெற வேண்டும். மாணவர்கள் மீதான புகாரை விசாரிக்கும், ‘விசாரணை குழுவில்’ மாணவர்கள் சார்பாக மாணவர்கள் இருக்க வேண்டும்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள் மீது இதைக் காரணம் காட்டி எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அதை தொடர்ந்து கல்லூரி முதல்வர் மாணவர்களிடம் வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட கல்லூரி மாணவர்களை மீண்டும் கல்லூரியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கவும் இன்று இரவு முழுவதும் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 452

    0

    0