தமிழகத்தில் நடப்பது திராவிட மாடலா? கொலை மாடலா? சிபிஐ விசாரணை தேவை : தமிழிசை விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
7 July 2024, 7:04 pm

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு தெலுங்கானா முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;”பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் இறப்பு மிகுந்த மனவேதனையை தந்துள்ளது.

அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் பின்புலம் இருப்பதால் சிபிஐ விசாரணை தேவை. தமிழகத்தில் நடப்பது திராவிட மாடலா? கொலை மாடலா?’ தமிழ்நாட்டில் அரசியல் கொலைகள் அதிகரித்துவிட்டன.

அதிமுக, விசிக, பாமக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது தாக்குதல் தொடர்கிறது. முதல்வரின் சொந்த தொகுதி குற்றங்களுக்கு புகலிடமாக மாறியுள்ளது.”

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 237

    0

    0