டிரெண்டிங்கான அல்லு அர்ஜுன்.. பின்னணியில் இப்படி ஒரு அரசியலா?
Author: Hariharasudhan23 December 2024, 2:26 pm
அல்லு அர்ஜுன் கைதானது முதல் ஆளும் காங்கிரஸ் அரசின் விமர்சனம் வரையிலான நீண்ட அரசியல் குறித்து இதில் பார்க்கலாம்.
ஹைதராபாத்: கடந்த சில நாட்களுக்கு முன்பு, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் ‘புஷ்பா 2’ என்ற திரைப்படம் வெளியானது. இந்தப் படத்திற்கான சிறப்புக் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிலில் சிக்கி தாய் உயிரிழந்த நிலையில், மூளைச்சாவு அடைந்தார்.
இது தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், கடந்த வாரம் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். பின்னர், ஜாமீன் கிடைத்த அவர், ஒருநால் சிறைவாசத்துக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்தார். இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் அளிக்கப் போவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், அல்லு அர்ஜுன் விவகாரம் அரசியலாக மாறியது மட்டுமின்றி, தெலுங்கானா சட்டப்பேரவை வரையிலும் சென்றது. அந்த வகையில், இதுதொடர்பாக தெலுங்கான சட்டமன்றத்தில் பேசிய அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, “பெண் உயிரிழந்து தெரிந்ததால் அல்லு அர்ஜுன் தியேட்டரை விட்டு வெளியேறவில்லை.
அல்லு அர்ஜுன் கால்களை இழந்தாரா? அல்லது கண் அல்லது கிட்னியை இழந்தாரா? அவரது வீட்டிற்குச் சென்று சினிமா பிரபலங்கள் பார்க்க வேண்டியதன் அவசியம் என்ன? நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் குறித்து சினிமா பிரபலங்கள் யாராவது கவலைப்பட்டு உள்ளீர்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து, அல்லு அர்ஜுன், “என்னைப் பற்றி தவறான தகவல்கள் பரப்பப்பட்டு உள்ளன. தவறான குற்றச்சாட்டுகளும் என் மீது சுமத்தப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் எந்தவொரு அரசியல் தலைவரையோ அல்லது அதிகாரிகளையோ நான் விமர்சிக்க விரும்பவில்லை. எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடைபெற்று இருக்கிறது” என்றார்.
மேலும், அல்லு அர்ஜுனின் மனைவி ஸ்நேகா ரெட்டியின் தந்தையும், பிரபல தொழிலதிபருமான கச்சரலா சந்திரசேகர் ரெட்டி, காங்கிரஸ் கட்சியில் நீண்டகாலமாக பணியாற்றியவர். ஆனால், 2014ஆம் ஆண்டு சந்திரசேகரராவின் பாரதிய ராஷ்டிர சமதியில் (BRS) இணைந்தார்.
பின்னர், கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நாகார்ஜுன சாகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், அங்கு வேட்பாளராக நோமில் பகத்தை நிறுத்தியது பிஆர்எஸ். இதனால் அதிருப்தியில் அடைந்த கச்சரலா சந்திரசேகர் ரெட்டி, மீண்டும் காங்கிரஸுக்கு திரும்பினார்.
இதையும் படிங்க: மாமன் மகளையும் விட்டு வைக்கல.. ஆசை வலையில் வீழ்ந்த 10க்கும் மேற்பட்ட பெண்கள்.. என்ன நடந்தது?
அப்போது மக்களவைத் தேர்தல் வந்த நிலையில், மல்காஜ்கிரி தொகுதியில் போட்டியிட முயன்றும் அது கூடவில்லை. எனவே, காங்கிரஸில் இருந்தும் விலக முடிவெடுத்த நிலையில் தான் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பிஆர்எஸ் கட்சியில் இருக்கும்போது, தான் விரும்பிய நாகார்ஜுன சாகர் தொகுதியில், தனது மருமகனும், நடிகருமான அல்லு அர்ஜுனை அழைத்து மண்டபம் ஒன்றின் திறப்பு விழாவை மிகவும் பிரமாண்டமான முறையில் கச்சரலா சந்திரசேகர் ரெட்டி நடத்திக் காட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.