அண்ணாமலை இல்லாமல் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடத்துவதில் என்ன தப்பு? பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
4 October 2023, 11:24 am

அண்ணாமலை இல்லாமல் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடத்துவதில் என்ன தப்பு? பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேச்சு!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையில் நிகழ்வுகளை முடித்துக் கொண்டு இன்று காலை விமானம் மூலம் டெல்லி கிளம்பினார். அவரை வழியனுப்பிய பின் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் , கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது நேற்று ஒரு லட்சம் வங்கி கணக்குகளுக்கு 3,749 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது எனவும், முத்ரா, ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் என பல்வேறு திட்டங்களில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது எனவும், தெரிவித்தார்.

கோவையின் வேகமான வளர்ச்சிக்கு இந்த கடனுதவி திட்டம் உறு துணையாக இருக்கும் எனவும், தமிழகத்தில் முதல்முறையாக இந்த மாபெரும் கடனுதவி திட்டம் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

நேற்றைய நிகழ்வில் ஒருவர் கடன் கிடைக்க வில்லை என சொன்னார், அவரது கோரிக்கையும் கேட்கபட்டது என தெரிவித்த அவர், அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன் , அமல்கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் முழுக்க முழுக்க தொகுதி பிரச்சினைகளுக்காக நிதியமைச்சரை சந்தித்தனர் எனவும், இது
அரசு நிகழ்வு என்பதால் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.

கோவையில் சிட்பி வங்கி கல்வெட்டில் தமிழ் மொழி இல்லாதது குறித்து நிதி அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் எனவும், எந்த ஊரில் வங்கி திறந்தாலும் அந்த ஊரில் உள்ள மொழி கல்வெட்டில் இடம் பெற வேண்டும் என நிதி அமைச்சர் வங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் எனவும் தெரிவித்தார்.

தனியார் கல்லூரி நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படவில்லை எனவும் , கல்லூரியின் நிகழ்ச்சி நிரலை சரியாக கவனிக்காமல் விட்டு விட்டோம், காலையில் இருந்து தொடர்ச்சியான நிகழ்வுகளில் இருந்ததால் அதை கவனிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

கோவையில் தொடர் நிகழ்வுகளில் பங்கேற்றதால் நிதியமைச்சர் மகிழ்வாக இருந்தார் எனவும், அரசியல் தொடர்பான நிகழ்வுகள் எதுவும் நிதியமைச்சருக்கு இல்லை எனவும், தனிப்பட்ட நிகழ்வுகள் எதுவும் இல்லை எனவும் தெரிவித்த அவர், கூட்டணி பேச்சுவார்த்தை அனைத்தும் தேசிய தலைமை முடிவு செய்யும் எனவும் தெரிவித்தார்.

நேற்று சென்னையில் கோட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றதா என்பது குறித்து தெரியவில்லை. மாநிலத் தலைவர் இல்லாமல் கோட்டத் தலைவர்கள் கூட்டம் நடத்தலாம் எனவும் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 401

    1

    0