ஓபிஎஸ் கூறுவதில் உண்மையல்ல.. விஷயம் தெரியாம பேசாதீங்க : அமைச்சர் ஐ.பெரியசாமி விமர்சனம்!!
Author: Udayachandran RadhaKrishnan26 March 2022, 1:42 pm
திண்டுக்கல்லில் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எதிர்கட்சி துணைத்தலைவர் ஓ பன்னீர்செல்வம் கூட்டுறவு சங்கங்களில் காசோலை வழங்குகின்ற அதிகாரத்தை தலைவரிடம் இருந்து எடுக்கபட்டுவிட்டதாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கூட்டுறவு சங்கங்களின் விதிகளின்படியும் அதன் துணை விதிகளின் படியும் அன்றாட பணிகளை அன்றாட செயல்பாட்டினை காசோலையில் கையெழுத்து போடுகின்ற முழு அதிகாரமும் செயலாளருக்கு தான் உள்ளது.

ஒரு சில சங்கங்களில் செயலரும் அவருக்கு அடுத்த பதவியில் உள்ள அரசு சம்பளம் வாங்கக்கூடியவர் சேர்ந்து தான் கையெழுத்து போடுவார்கள். இதுதான் கூட்டுறவு சங்கத்தின் சட்டத்தில் உள்ள விதி ஆகும். ஓ பன்னீர்செல்வம் கூறுவது உண்மையல்ல என கூறினார்.