காங்கிரஸ் கட்சிக்கு விஜயதாரணி செய்தது துரோகம்… விளவங்கோடு மக்கள் மன்னிக்கவே மாட்டாங்க : கொந்தளிக்கும் எம்பி!!

Author: Udayachandran RadhaKrishnan
24 February 2024, 4:58 pm

காங்கிரஸ் கட்சிக்கு விஜயதாரணி செய்த துரோகம்… விளவங்கோடு மக்கள் மன்னிக்கவே மாட்டாங்க : கொந்தளிக்கும் எம்பி!!

விஜயதாரணி இன்று பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பாக 3 முறை போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வானவர். 2011,2016 மற்றும் 2021 என மூன்று முறை எம்எல்ஏவாக உள்ளவர்.

இந்த நிலையில், விஜயதரணி பாஜகவில் ஐக்கியமானதை தொடர்ந்து, அவரை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம் செய்து அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் அஜய் குமார் உத்தரவிட்டார்.

விஜயதாரணி மீது கட்சி தாவல் தடை சட்டம் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். விஜயதாரணி பாஜகவில் இணைந்தது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தங்களது விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த், விஜயதாரணி முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், திருமதி. விஜயதரணி அவர்கள் மாற்று கட்சியில் இணைந்தது அவரை 3 முறை சட்டமன்ற உறுப்பினராக்கி அழகு‌ பார்த்த விளவங்கோடு தொகுதி மக்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் செய்த மிகப்பெரிய துரோகம். மக்கள் அவரை ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள் என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ