காங்கிரஸ் கட்சிக்கு விஜயதாரணி செய்த துரோகம்… விளவங்கோடு மக்கள் மன்னிக்கவே மாட்டாங்க : கொந்தளிக்கும் எம்பி!!
விஜயதாரணி இன்று பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பாக 3 முறை போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வானவர். 2011,2016 மற்றும் 2021 என மூன்று முறை எம்எல்ஏவாக உள்ளவர்.
இந்த நிலையில், விஜயதரணி பாஜகவில் ஐக்கியமானதை தொடர்ந்து, அவரை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம் செய்து அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் அஜய் குமார் உத்தரவிட்டார்.
விஜயதாரணி மீது கட்சி தாவல் தடை சட்டம் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். விஜயதாரணி பாஜகவில் இணைந்தது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தங்களது விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த், விஜயதாரணி முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், திருமதி. விஜயதரணி அவர்கள் மாற்று கட்சியில் இணைந்தது அவரை 3 முறை சட்டமன்ற உறுப்பினராக்கி அழகு பார்த்த விளவங்கோடு தொகுதி மக்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் செய்த மிகப்பெரிய துரோகம். மக்கள் அவரை ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள் என காட்டமாக பதிவிட்டுள்ளார்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.