பெண்கள் சாராயம் குடிக்கும் அளவிற்கு கள்ளக்குறிச்சி போலீஸ் என்ன செய்து கொண்டிருந்தது? குஷ்பு கேள்வி!
Author: Udayachandran RadhaKrishnan26 June 2024, 2:46 pm
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் தேசிய மகளிர் ஆணையக்குழு உறுப்பினர் குஷ்பு நேரில் விசாரணை மேற்கொண்டார். அப்போது அங்கு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெண்கள் சாராயம் குடிக்கும் அளவிற்கு கள்ளக்குறிச்சி போலீஸ் என்ன செய்து கொண்டிருக்கிறது?
விஷச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்கள் அதிகமாக உள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும். சிலருக்கு பார்வையே பாதிக்கப்பட்டுள்ளது என கூறினார்.