என்னாச்சு நண்பா? அஜித் உடல்நிலை குறித்து நலம் விசாரித்த த.வெ.க தலைவர் விஜய்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 March 2024, 8:10 pm

என்னாச்சு நண்பா? அஜித் உடல்நிலை குறித்து நலம் விசாரித்த த.வெ.க தலைவர் விஜய்!!

நடிகர் அஜித்குமார் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் திடீரென்று நேற்று அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தன.

சென்னையில் சில தினங்களுக்கு முன்பு மகன் ஆத்விக் பிறந்த நாளை குடும்பத்துடன் அஜித் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியான நிலையில் மருத்துவமனையல் அஜித் அனுமதிக்கப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நடிகர் அஜித் நலமுடன் இருக்கிறார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறுவை சிகிச்சை முடிந்து அஜித் நலமுடன் இருக்கிறார். ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என கூறப்பட்டது.

இடதையடுத்து நேற்று அஜித் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். அவருக்கு மூளையில் கட்டி ஏற்பட்டதாக இணையத்தில் தகவல் பரவிய நிலையில் பின்னர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அது உண்மையில்லை, காது – மூளைக்கு செல்லும் நரம்பில் வீக்கம் ஏற்பட்டதாகவும், இதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு தான் அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் கூறினார்.

இந்த நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அஜித்துக்கு விஜய் செல்போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தாக கூறப்படுகிறது

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே அஜித் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் விஜய் விசாரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!