தமிழகத்தில் பொங்கல் பரிசு எப்போது…? வெளியாகும் முக்கிய அறிவிப்பு? தமிழக அரசு தகவல்!!!

Author: Udayachandran RadhaKrishnan
31 December 2023, 7:32 pm

தமிழகத்தில் பொங்கல் பரிசு எப்போது…? வெளியாகும் முக்கிய அறிவிப்பு? தமிழக அரசு தகவல்!!!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்னும் இரண்டு வாரங்களில் கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரொக்கப் பணத்துடன் அரிசி, கரும்பு, வெல்லம் அல்லது சர்க்கரை ஆகியவை பரிசுத்தொகுப்பாக வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த ஆண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மாநிலத்தின் பிற பகுதி மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதால், இந்த ஆண்டைப்போல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1,000 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் கரும்பு விவசாயிகளின் நலன் கருதி ஒரு முழு கரும்பு ஆகியவற்றை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு அடுத்த ஓரிரு தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 388

    0

    0